இஸ்ரோவில் வேலை பார்க்க ஆசையா? 78 பணியிடங்கள்.. பிஇ/பிடெக் முடிச்சவங்க விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி அப்ரெண்டீஸ் டிரெய்னி மற்றும் டிப்ளமோ அப்ரெண்டீஸ் டிரெய்னி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஐடிஐ, டிப்ளமோ, பிஇ / பிடெக் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதனை இங்கு பார்க்கலாம்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. இஸ்ரோவில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. டெலிமெட்ரி டிராக்கிங் & கமாண்ட் நெட்வொர்க் பிரிவில் உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

isro-recruitment-75-apprentice-posts-be-btech-candidates-can-apply-check-details-here

பணியிடங்கள் விவரம்;

* பட்டதாரி அப்ரெண்டீஸ் டிரெய்னி
* கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த பிரிவு படிப்புகள் - 15
* எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் என் ஜினியரிங் சார்ந்த படிப்புகள் - 20
* எலக்ட்ரிக்கல் - 03
* மெக்கானிக்கல் என் ஜினியரிங் - 05
* ஏரோநெட்டிக்கல் என் ஜினியரிங் - 02
* லைப்ரரி சயின்ஸ் - 01

2. டிப்ளமோ அப்ரெண்டீஸ் டிரெய்னி:
*மெக்கானிக்கல் என் ஜினியரிங் சார்ந்த படிப்புகள் - 02
*எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 03
*எலக்டானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என் ஜினியரிங் - 08
*சிவில் என் ஜினியரிங் - 01
*கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் - 01

3.டிப்ளமோ இன் கமர்சியல் பிரக்டீஸ் அப்ரெண்டீஸ்
* கமெர்ஷியல் பிரக்டீஸ் - 05

4. ஐடிஐ அப்ரெண்டீஸ்
* எலக்ட்ரானிக்ஸ் - 06
* மெஷினிஸ்ட் - 01
* ஃபிட்டர் - 01
* வெல்டர் - 01
என மொத்தம் 78 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பிஇ/ பிடெக், டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். துறைசார்ந்த பிரிவில் என்ஜினியரிங் , டிப்ளமோ முடித்தவர்கள் கோரப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஐடிஐ கல்வி தகுதி கொண்டவர்கள் 2022- 2024- வரையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

சம்பளம் எவ்வளவு?

* பட்டதாரி அப்ரெண்டீஸ்: ரூ.9,000
* டிப்ளமோ: ரூ.8,000
* ஐடிஐ: ரூ.7000 சம்பளம் வழங்கப்படும்.
ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இந்த பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

தேர்வு முறை:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி நாள் - 21.04.2025 ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2025_Mar/ApprenticeAdvertisement_28032025.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+