224 காலியிடங்கள்.. ரூ.55,100 வரை சம்பளம்.. இஸ்ரோ சேட்டிலைட் சென்டரில் நல்ல வேலை.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: இஸ்ரோவின் யூ ஆர் ராவ் சேட்டிலைட் சென்டரில் காலியாக உள்ள 224 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறைந்தபட்சம் ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.56,100 வரை சம்பளத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பிஇ, பிடெக், டிகிரி, ஐடிஐ முடித்தவர்கள், சமையல், டிரைவிங் தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மத்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இஸ்ரோ எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரோவின் ஒரு பகுதியாக யூஆர் ராவ் சேட்டிலைட் சென்டர் - இஸ்ரோ கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சயின்டிஸ்ட் என்ஜினீயர்: இந்த பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எம்இ, எம்டெக், பிஇ, பிடெக் முடித்து மெக்கட்ரானிக்ஸ் முடித்திருக்க வேண்டும். எம்எஸ்சி என்ஜினீயரிங், மெட்டீரியல்ஸ் என்ஜினீயரிங், மெட்டீரியல் சயின்சய், மெட்டராலர்ஜிக்கல் என்ஜினீயரிங், பாலிமர் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, கணிதம், அப்ளைட் கணிதம், இயற்பியல், அப்ளைட் இயற்பியல் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
டெக்னீசியன் - பி: இந்த பணிக்கு மொத்தம் 142 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஐடிஐயில் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டெக்னீக்கல் பவர், மெக்கானிக் கன்சூமர், எலக்ட்ரானிக்ஸ் அப்ளியன்சஸ், மெக்கானிக்ஸ் இன்டரஸ்ட்ரீயல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரீக்கல், எலக்ட்ரீசியன், போட்டோகிராபி, டிஜிட்டல் போட்டோகிராபி, பிட்டர், பிளம்பரம், ரெப்ஃரிஜிரேஷன் ஏப் கண்டிஷனிங், டர்னர், கார்பென்டடர், மோட்டார் வாகன மெக்கானிக், மெஷினிஸ்ட், வெல்டர் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
டிராக்ட்ஸ்மேன்-பி: Draughtsman - B பணிக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஐடிஐயில் Draughtsman மெக்கானிக்கல், Draughtsman சிவில் டிரேட் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
டெக்னீக்கல் அசிஸ்டென்ட்: இந்த பணிக்கு மொத்தம் 55 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரி்ங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
சயின்டிபிக் அசிஸ்டென்ட்: இந்த பணிக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஎஸ்சி வேதியியல், இயற்பியல், அனிமேஷன் மல்டி மீடியா, கணிதம் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் லைப்ரேரி அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். எம்எஸ்சி லைப்ரேரி சயின்ஸ், லைப்ரேரி அன்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் அல்லது அதற்கு நிகரான படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
பிற பணிகள்: சமையல் பணிக்கு 4 பேர், ஃபயர்மேன் ஏ பணிக்கு 3 பேர், டிரைவர் பணிக்கு 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சமையல் பணிக்கு 5 ஆண்டு சமையல் தொழிலில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஃபயர்மேன் பணிக்கு திடகாத்திரமான உடலுடன் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பாஸ் செய்தவர்கள் விண்ணப்ப்ம செய்யலாம். டிரைவர் பணிக்கு லைட், ஹெவி லைசென்ஸ் வைத்து குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு: சயின்டிஸ்ட் என்ஜினீயர் பணிக்கு 30 வயதுக்குள், டெக்னீக்கல் அசிஸ்டென்ட், லைப்ரேரி அசிஸ்டென்ட், டெக்னீசியன் பி, டிராக்ட்ஸ்மேன் பி, சமையல் தொழிலாளி, டிரைவர், பணிகளுக்கு 35 வயதுக்குள்ளும், ஃபயர்மேன் ஏ பணிக்கு 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி என்றால் 3 வயது வரையும் வயது தளர்வு என்பது வழங்கப்படும்.
மாத சம்பளம்: சயின்டிஸ்ட் என்ஜினீயர் பணிக்கு மாதம் ரூ.56,100 சம்பளமாக வழங்கப்படும். டெக்னீக்கல் அசிஸ்டென்ட், லைப்ரேரி அசிஸ்டென்ட் பணிகளுக்கு மாதம் ரூ.44,900 சம்பளமாக வழங்கப்படும். டெக்னீசியன் பி, டிராக்ட்ஸ்மேன் பி பணிகளுக்கு மாதம் ரூ.21,700 சம்பளமாக வழங்கப்படும். சமையல் தொழிலாளி, டிரைவர், ஃபயர்மேன் ஏ பணிகளுக்க மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். இதுதவிர பிற அலோவன்ஸ் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.isro.gov.in, www.ursc.gov.in, wwww.istrac.gov.in ஆகிய இணையதளங்கள் வழியாக மார்ச் மாதம் 1ம் தேதிக்குள் ஆன்லைனில் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 முதல் ரூ.250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பணியை பொறுத்து விண்ணப்ப கட்டணம் மாறுபடும். முழுவிபரம் கீழே உள்ள அதிகாரப்பூர் அறிவிப்பில் தரப்பபட்டுள்ளது.
இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணியமர்த்தப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பெங்களூர் மற்றும் கர்நாடகா ஹாசனில் உள்ள மையங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications