IT Jobs: TCS அலுவலகத்தில் சூப்பர் வேலை.. டேட்டா அனலிஸ்ட் பிரிவில் ஏராளமான காலியிடங்கள்.. சென்னையில் பணி
சென்னை: டிசிஎஸ் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட் (Data Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 8 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட் (Data Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.
அதன்படி டேட்டா அனலிஸ்ட் பணியில் குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டேட்டா அனலிசிஸ் மற்றும் விசுவலைசேஷன்/ரிப்போர்ட்டிங் பணியில் குறைந்தபட்சம் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
டேட்டா மாடல்ஸ், டேட்டா மைனிங் மற்றுமு் செக்மென்டேஷன் டெக்னிக்ஸ் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் கொண்டிருக்க வேண்டும்.
புரோகிராமிங் லேங்குவேஜ்களான எஸ்க்யூஎல், ஆர், பைத்தான், dax உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு கொண்டிருக்க வேண்டும். அட்வான்ஸ்ட்ஸ் எக்ஸல் மெத்தட்ஸ்களான writing macros, pivot tables, VBA lookups உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டேட்டா விசுவலைசேஷன் டூல்ஸ்களான பவர் பிஐ (preferred) அல்லது Tableau தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் அனலிட்டிக்கல்ஸ் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். Cloud பிளாட்பார்ம்ஸ்களான Azure அல்லது AWS உள்ளிட்டவை தெரிந்து வைத்திருக்க வேண்டும். புரோகிராமிங் பேக்கிரவுண்ட் என்றால் ஜாவா, எஸ்க்யூஎல் மற்றும் செல் ஸ்கிரிப்ட்டிங்கில் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 8 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் செலக்ட் ஆவோர் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூ தொடர்பான விவரங்கள் இ-மெயில் அல்லது தொலைபேசி மூலமாக தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications