IT Jobs:அமேசான் நிறுவனத்தில் அசத்தலான பணி.. டிகிரி முடித்தவரா? சென்னையில் வேலை செய்யலாம்
சென்னை: பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள அமேசானின் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஆன்லைன் வர்த்தகம், க்ளவ்ட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறை சர்வீஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி நம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அமேசான் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
அமேசான் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் (Software Development Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளநிலை அல்லது முதுநிலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்ஜினியரிங் அல்லது அதனுடன் தொடர்புடைய பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Unix, Linux-ல் சி/சி++/ஜாவா உள்ளிட்டவை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸின் அடிப்படையான அல்காரிதம்ஸ், டேட்டா ஸ்டக்சர்ஸ், ஆப்ஜெக்ட் ஒரியென்டட் டிசைன், டேட்டா பேசஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அமேசான் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.
சென்னை அலுவலகத்தில் பணி என்பதால் அமேசான் நிறுவனமே தங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது. இதுதொடர்பாக நேரடியாக இண்டர்வியூ எடுப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை [email protected] இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications