IT JOBS: அனுபவம் தேவையில்லை.. B.sc, BCA முடித்தோருக்கு Cognizant ஐடி நிறுவனத்தில் வேலை.. ஜன.,31 கடைசி நாள்
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் 3 பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிஎஸ்சி, பிசிஏ உள்பட பிற பிரிவுகளில் டிகிரி படித்து அனுபவம் இல்லாதவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய ஜனவரி 31 கடைசி நாளாகும்.
காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. தற்போது காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் அனலிஸ்ட் டிரெய்னி (Analyst Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது Freshersகளுக்கான வேலைவாய்ப்பாகும். தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 3 பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
முதலில் நாம் பார்ப்பது Analyst Trainee Aligned to IT and Integrated smart operation பணியாகும். இந்த பணிக்கு 2024 அல்லது 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி (Allied Streams), கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
கண்டிப்பாக அரியர்ஸ் இருக்க கூடாது. இவர்கள் 10, பிளஸ் 2, டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு உள்ளிட்டவற்றில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 59.9 சதவீத மதிப்பெண் என்றால் அனுமதி கிடையாது. மேலும் டைம் மேனேஜ்மென்ட் ஸ்கில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனையை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், டீமாக சேர்ந்து பணியாற்றும் திறமை உள்ளிட்டவை இருக்க வேண்டும். கிரிட்டிக்கல் திங்கிங் இருக்க வேண்டும்.
2வது பணியின் பெயர் Analyst Trainee aligned to Multicloud பணியாகும். இந்த பணிக்கு 2024 அல்லது 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி பிசிஏ, பிஎஸ்சி, பிஏ, பிபிஏ, பிகாம், Bvoc, BMS உள்ளிட்ட ஏதாவது ஒரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும். 49.9 சதவீத மதிப்பெண் கொண்டவர்களுக்கு அனுமதியில்லை. மேலும் அரியர்ஸ் இருக்க கூடாது. அதோடு ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
3வது வேலை என்பது Analyst Trainee aligned to digital workplace services.இந்த பணிக்கும் 2024 அல்லது 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி பிசிஏ, பிஎஸ்சி, பிஏ, பிபிஏ, பிகாம், Bvoc, BMS உள்ளிட்ட ஏதாவது ஒரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். நைட்ஷிப்ட்டுக்கும் தயாராக இருக்க வேண்டும். நைட்ஷிப்ட் பார்ப்போருக்கு அலோவன்ஸ் உண்டு. அதேபோல் இந்தியாவில் எந்த நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட்டாலும் அங்கு சென்று பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
ஏனென்றால் இது ஒரு PAN India பணியாகும். தமிழகத்தில் சென்னை, கோவையிலும் இந்த நிறுவனத்துக்கு அலுவலகம் உள்ளது. இதனால் அதிர்ஷ்டம் இருப்பின் சென்னை, கோவையில் பணி கிடைக்கலாம். இதுதவிர பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே, கொச்சி, புவனேஸ்வர், இந்தூர் உள்பட பல இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு நியமனம் செய்யப்பட்டாலும் கூட பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜனவரி 31ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தேதி முடிவதற்கு முன்பாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்வோர் ரெஸ்யூம்(அதிகபட்சம் 2 பக்கம்) , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்திருக்க வேண்டும். கல்லூரி ஐடி கார்டு, பள்ளி, கல்லூரிக்கான மார்க் ஷீட் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். பான் கார்டு இருக்க வேண்டும். பான் கார்டில் பெயர், அப்பா பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருக்க வேண்டும்.
அதேபோல் இந்தியாவை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்வதற்கு வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இருக்க வேண்டும். காக்னிசண்ட்டில் கடந்த 6 மாதங்களில் இண்டர்வியூவில் பங்கேற்றவர்கள் இதில் பங்கேற்க வேண்டாம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications