IT jobs: டிகிரியே போதும்.. காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. ஜூன் 15 கடைசி நாள்
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2025 மற்றும் 2026ம் ஆண்டில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஜூன் 15 கடைசி நாளாகும்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட்டில்(Congnizant) இருந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதன்படி தற்போதைய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வருமாறு:

காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது கஸ்டமர்/ டெக்னிக்கல் சப்போர்ட் ரோலில் டிஜிட்டல் வொர்க்பிளேஸ் பிராக்டீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 3 ஆண்டு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
குறிப்பாக 2025 மற்றும் 2026ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் தகுதியானவர்கள். அதன்படி பிகாம், பிசிஏ, பிஎஸ்சி, பிஏ, பிபிஏ, B.Voc, Bms உள்ளிட்ட பிற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அரியர்ஸ் இருக்க கூடாது. இவர்கள் 10, 12ம், டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீதத்துக்கு அதிகமாக கட்டாயம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதுதவிர ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டெக்னாலஜி தொடர்பான விபரங்களை விரைவாக கற்று கொண்டு Client-களிடம் எடுத்து சொல்வதற்கான திறமை இருக்க வேண்டும். இது PAN India பணியாகும். இதனால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சென்னை, கர்நாடகாவில் பெங்களூரிலும் காக்னிசண்ட் அலுவலகம் உள்ளது. இதனால் அதிர்ஷ்டம் இருப்பினும் அங்கும் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் ஷிப்ட் அடிப்படையிலான பணியையும் பார்க்க ரெடியாக இருக்க வேண்டும். இந்த பணிக்கு PAN Card, ஆதார் கார்டு கட்டாயமாகும். அது இல்லாவிட்டால் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதில் உங்களின் பெயர் முகவரி சரியாக இருக்க வேண்டும். சான்று மற்றும் பார்ன் கார்டு இடையே வித்தியாசம் இருந்தால் உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களின் பின்னணி விபரங்கள் முழுவதும் அறிந்தே பிறகே நியமனம் செய்யப்படுவார்கள்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் 15ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிக்கு சர்வீஸ் பாண்ட் கிடையாது. நைட்ஷிப்ட் அலோவன்ஸ் இருக்கு அதேபோல் நிறுவனத்தில் இருந்து உயர்கல்விக்கும் ஸ்பான்ஷர்ஷிப் செய்யப்படும். டைம்லி ரிவார்ட்ஸ் உள்ளது. தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
