IT JOBS: வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. சென்னை Cognizant நிறுவனத்தில் சூப்பர் வேலை! ரெடியா?
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் டெவலப்பர் பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது Hybrid மாடல் பணியாகும். இதனால் வாரத்தில் 2 நாட்கள் வரை அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து பணியாற்றலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant) உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது டெவலப்பர் (Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியை பெற விரும்புவோர் கிளவுட் பிளாட்பார்ம் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். குறிப்பாக கூகுள் கிளவுட் பிளாட்பார்ம் சர்வீஸில் சிறப்புடன் செயல்பட வேண்டும்.
அதேபோல் கிளவட் ஸ்டோரேஜ், கிளவுட் டேட்டாஃபுளோ/பீம் அல்லது பப்/சப் - இல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பைத்தானில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். எஸ்க்யூஎல் -லில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் டேட்டா பைப்லைன் ஆர்க்கெஸ்ட்ரேஷன் டூல்ஸ்களான அப்பாச்சி ஏர்ஃபுளோ கிளவுட்கம்போர், ஏர்ஃபுளோ டாக்ஸ்டர் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் DevOPS/CI/CD உள்ளிட்டவற்றை எடுத்து கொண்டால் GitLab GitHub actions தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஆட்டோமேட் டெப்ளாயின்மென்ட் மற்றும் டெஸ்ட்டிங் புராசஸில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம், அனுபவம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
மேலும் இது ஒரு ஹைபிரிட் (Hybrid) மாடல் பணியாகும். இதனால் வாரத்தில் அனைத்து நாட்களும் அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டும் என்பது வேண்டாம். அதிகபட்சமாக 2 நாட்கள் வரை அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications