IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் ஐடி வேலை.. அழைக்கும் HCL.. மார்ச் 14ல் சென்னையில் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ மார்ச் 14ம் தேதி நடைபெற உள்ளது. டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும், அரியர்ஸ் வைத்திருப்போரும் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து Freshers Banking Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு தேவையான கல்வி தகுதி உள்பட பிற விவரங்கள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

it-jobs-hcl-hiring-for-banking-voice-process-role-in-chennai-and-interview-on-march-14

இது Freshers-க்கான பணியாகும். இதனால் முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். அதேபோல் பட்ட மேற்படிப்பை முடித்திருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.

கல்வி தகுதி என்ன?

குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் பிபிஏ, பிகாம், பிசிஏ, பிஎஸ்சி, எம்பிஏ, எம்ஏ, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் அரியர்ஸ் இருந்தாலும் கூட விண்ணப்பம் செய்யலாம். பட்ட மேற்படிப்பு என்றால் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்டவற்றை படித்திருக்க வேண்டும்.

அதேபோல் 2026ம் ஆண்டில் பட்ட மேற்படிப்பை முடிப்போர் என்றால் எம்சிஏ, எம்எஸ்சி ஐடி, எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளை தவிர மற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேவேளையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?

விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்டர் கால் பேச தெரிந்திருக்க வேண்டும். பணி என்பது UK Shift அடிப்படையில் இருக்கும். ரோட்டேஷனல் ஷிப்ட் உண்டு. இதனால் இரவு பணிக்கும் தயாராக இருக்க வேண்டும்.

சம்பளம் + டிரெய்னிங்

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும்.

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் Cab-யில் சென்று வரலாம். மேலும் இன்டர்நநேஷனல் டிரெய்னர்ஸ் வைத்து டிரெய்னிங் வழங்கப்படும்.

மார்ச் 14ல் இண்டர்வியூ

இந்த பணிக்கான இண்டர்வியூர் மார்ச் 14ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai, Tamil Nadu என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

இண்டர்வியூ Face to Face முறையில் நடைபெறும். லேப்டாப் எடுத்து செல்ல வேண்டும். ரெஸ்யூம் மற்றும் அரசு அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும். லேப்டாப், பென்டிரைவ் எடுத்து செல்ல அனுமதி கிடையாது.

சோழிங்கநல்லூரில் பணி

பணிக்கு தேர்வாகும் நபர்கள் No 602/3/138, Elcot Economic Zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+