IT JOBS: BE - B.Tech முடித்தோருக்கு சூப்பர் வேலைவாய்ப்பு.. சென்னை HCL-யில் பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை(HCL IT JOBS) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பிஇ, பிடெக் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
எச்சிஎல் ஐடி நிறுவனம் மொத்தம் 60 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 2.23 லட்சத்துக்கும் அதிகமானவர்கள்பணியாற்றி வருகின்றனர்.

தலைமை அலுவலகம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரையில் எச்சிஎல் நிறுவனம் உள்ளது. இப்போது பலருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
எச்சிஎல் அறிவிப்பு
இந்நிலையில் தான் எச்சிஎல்-லில் அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது C# Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
என்ன தகுதி வேண்டும்?
இந்த பணியை பெற விரும்புவோர் கட்டாயமாக பிஇ, பிடெக் படிப்புகளை EEE or ECE பிரிவில் முடித்திருக்க வேண்டும். C#ல் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். அப்ளிகேஷன் டெவலப்மென்ட் தெரிந்திருக்க வேண்டும்.
Embedded Systems Domain-யில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். C#-யில் டிசைன் பேட்டர்ன்ஸ், மல்டித்ரெட்டிங், மெமரி மேனேஜ்மென்ட் நிபுணத்துவராக இருக்க வேண்டும்.
ரியல் டைம் அப்ளிகேஷன்ஸ்
அதேபோல் ஐபிசி எனும் இன்டர் புராசஸ் கம்யூனிகேஷன், டிவைஸ் டிரைவர்ஸ், ரியல் டைம் அப்ளிகேஷன்ஸ், கம்யூனிகேஷன் புரோட்டகால்ஸ் (UART, SPI, 12C, CAN etc) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
டீபக்கிங் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். ஆப்ஜெக்ட் ஓரியன்டட் புரோகிராமிங் மற்றும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் லைப் சைக்கிள் உள்ளிட்டவை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
அனுபவம் என்ன?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சமாக 5 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில்தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவென்று கூறப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம்.
எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் [email protected] முகவரிக்கு ரெஸ்யூம் உள்பட பிற விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
தகுதியானவர்கள் இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications