IT Jobs: அனுபவம் இல்லாமலே ஐடி வேலை.. டிகிரி முடித்தோருக்கு ஜாக்பாட்.. ஏப்.,27ல் HCL-லில் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் ஏப்ரல் 27 ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. இதற்கு பணி அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்த தகுதி மற்றும் விண்ணப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து Customer service representative - Semi Voice Process பிரிவில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 2024, 2025ம் ஆண்டில் கலை மற்றும் அறிவியலில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி உள்ளிட்ட படிப்புகளை 2026ம் ஆண்டில் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பிடெக் இன்பர்மேஷன் டெக்னலாஜி, பிஇ, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி அனுபவம் தேவையில்லை.
இது Fresher-க்கான பணியாகும். இதனால் பணி அனுபவம் தேவையில்லை. அதேேவேளையில் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக இ-மெயில் மற்றும் சாட் சப்போர்ட் செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஷிப்ட் இருப்பின் அதன்படி பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
சென்னையில் பணி
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ‛பெஸ்ட் இன் இன்டஸ்ட்ரி' என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ஏப்ரல் 27 ம் தேதி இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ ஏப்ரல் 27 ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தா்ன இண்டர்வியூ நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கீழே உள்ள அறிவிப்பில் இருக்கும் விண்ணப்பம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here














Click it and Unblock the Notifications