IT Jobs: அனுபவம் தேவையே இல்லை.. நாளை சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் HCL

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் வேண்டாம். பிகாம், எம்பிஏ, பிபிஏ, எம்காம் உள்பட ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான இண்டர்வியூ நாளை (ஜுன் 22ம் தேதி) காலையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Customer service representative - Healthcare Fresher Voice பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

it-jobs-hcl-hiring-for-customer-service-representative-roles-on-june-22-in-chennai

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு அனுபவம் எதுவும் வேண்டாம். கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு டிகிரி படிப்பை முடித்திருந்தால் போதும். பிஇ, பிடெக், எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம்.

பணியை விரும்புவோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இ-மெயில் மற்றும் சாட் சப்போர்ட் வழங்க தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர்களின் பிரச்சனையை தீர்கக தெரிந்திருக்க வேண்டும். டேட்டா என்டர், அப்டேட் மற்றும் டேட்டா மேனேஜ்மென்ட் தெரிந்திருக்கவேண்டும்.

அதேபோல் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ‛பெஸ்ட் இன் இன்டஸ்ட்ரி' என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ ஜுன் 22ம் தேதி (நாளை) காலையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அதன்பிறகு நாளை காலையில் HCL Technologie, Special Economic Zone 33, ETA Techno park, Rajive Gandhi Salai, Navalur, Tamil Nadu 600 130 ETA - 3 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+