IT Jobs: டிகிரி மட்டுமே போதும்.. சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் வேலை.. ஏப்ரல் 17 -18ல் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஏப்ரல் 17 (நாளை), ஏப்ரல் 18 (நாளை மறுநாள்) ஆகிய தேதிகளில் சென்னையில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் International Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் இதற்கான இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

அதேவேளையில் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென் தகுதிகள் வேண்டும்?
இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். மேலும், மல்டி டாஸ்க் திறமை இருக்க வேண்டும். ஷிப்ட் என்பது US Shift முறையில் இருக்கும். இதனால் நைட் ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.
பணி என்ன?
பணிக்கு தேர்வாகும் நபர்கள் கஸ்டமர் சப்போர்ட் (புராசஸ் அசோசியேட்) என்ற பெயரில் நியமனம் செய்யப்படுவார்கள். இதனால் Inbound Calling இருக்கும். அதேவேளையில் சேல்ஸ் அல்லது அப்செல்லிங் அல்லது கிராஸ் செல்லிங் கிடையாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 17 - 18 ல் இண்டர்வியூ
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூ எங்கே?
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL Tech, Tower 4, Shollinganallur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் விருப்பம் உள்ளவர்கள் இந்த அறிவிப்பை பணியாற்றி கொள்ள வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications