IT Jobs: அரியர் இருந்தாலும் வேலை.. மே 21 - 22 ம் தேதி சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் HCL
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ மே 21 மற்றும் மே 22 என 2 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு அரியர்ஸ் இருப்பவர்களும், டிகிரி முடித்தவர்களும், கல்லூரி படிப்பில் கடைசி ஆண்டை முடித்து ரிசல்ட்டுக்கு காத்திருப்போரும் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து Voice and Non Voice Process(Health Care Domain) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அரியர்ஸ் இருந்தாலும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தற்போது தேர்வு எழுதி ரிசல்ட்டுக்கு காத்திருப்போரும் விண்ணப்பம் செய்யலாம்.
இது Fresher-க்கான பணியாகும். இதனால் அனுபவம் தேவையில்லை. அதேவேளையில் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன திறமை வேண்டும்?
இந்த பணிக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். Inbound மற்றும் Outbound கால்ஸ்க்கு ரெடியாக இருக்க வேண்டும். பணியானது UK, US, Austrialian Shift முறையில் இருக்கும். ரொட்டேஷனல் முறையில் ஷிப்ட் வரும். இதனால் நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.
சம்பளம் என்ன?
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். ஊழியர்களுக்கு அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும். இதுதவிர ஊழியர்களுக்கு இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 21 - 22ல் இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ மே 21 மற்றும் மே 22 என 2 நாட்கள் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் சோழிங்கநல்லூரியிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications