B.Com - BBA முடித்தோருக்கு சான்ஸ்.. மதுரை உள்பட 4 இடங்களில் காலியிடங்கள்.. அழைக்கும் HCL

Subscribe to Oneindia Tamil

மதுரை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பிகாம், பிபிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு பணி அனுபவம் தேவையில்லை. பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரை உள்பட 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

hcl-hiring-for-graduate-trainee-roles-for-4-various-locations-including-madurai

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களை பணியில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி Graduate Trainee பிரிவில் Financial Shared Service பிரிவில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய பணி அனுபவம் தேவையில்லை. விண்ணப்பம் செய்வோர் பிகாம், பிகாம் (Hons), பிபிஏ (பைனான்ஸ்), பிபிஏ (ஜெனரல்) உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்து முடித்திருக்க வேண்டும்.

இவர்கள் கல்லூரி படிப்பை 2025, 2026ம் ஆண்டில் முடித்தவர்களாக இருக்க வேண்டும். இந்த பணிக்கு சர்வீஸ் அக்ரிமெண்ட் உண்டு. இந்த சர்வீஸ் அக்ரிமெண்ட் 12 மாதங்களாக(ஓராண்டு) நிர்ணயம் செயயப்பட்டுள்ளன. இதனால் ஒருவர் பணிக்கு சேர்ந்தால் கண்டிப்பாக ஓராண்டு வரை பணியாற்ற வேண்டும். ஒருவேளை ஓராண்டுக்கு முன்பாக பணியை விட்டு சென்றால் ரூ.50 ஆயிரத்தை நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் மதுரை, உத்தர பிரதேச மாநிலம் நொய்டா, லக்னோ, மகாராஷ்டிராவின் நாக்பூர் என்று 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+