IT Jobs: அனுபவம் தேவையில்லை.. சென்னை எச்சிஎல் நிறுவனத்திலே சூப்பர் வேலை.. ரெடியா?
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிகிரி முடித்து அனுபவம் இல்லாதவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதுதவிர நம் நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் International Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கல்வி தகுதி என்ன?
இன்டர்நேஷனல் வாய்ஸ் புராசஸ் பணிக்கு கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை 2024 அல்லது 2025ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு என்றால் 2026ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி உள்ளிட்ட படிப்புகளைபடித்து முடித்திருக்க வேண்டும். இது Freshers-க்கான பணியாகும். எனவே முன் அனுபவம் தேவையில்லை.
அதேவேளையில் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம்.
வேறு தகுதிகள் என்ன?
இந்த பணியை விரும்புவோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். மேலும், மல்டி டாஸ்க் திறமை இருக்க வேண்டும். ஷிப்ட் என்பது ரோட்டேஷனல் முறையில் இருக்கும். இதனால் நைட் ஷிப்ட் பார்க்கவும் தயாராக வேண்டும்.
பணி என்ன?
பணிக்கு தேர்வாகும் நபர்கள் கஸ்டமர் சப்போர்ட் (புராசஸ் அசோசியேட்) International Voice Process (HealthCare)என்ற பொறுப்பில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
நியமனம் எங்கே?
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூர், நாவலூரில் உள்ள அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூ தேதி, நேரம் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும். இண்டர்வியூ என்பது ஆன்லைன் தேர்வு ம்றறும் மேனேஜர் ரவுண்ட் என்ற வகையில் இருக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications