IT Jobs: மதுரை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலை.. கோவையில் டிசம்பர் 6ல் இண்டர்வியூ
மதுரை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் -லில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ கோவையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது மதுரையில் உள்ள ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதன்படி Java Backend/Full Stack Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் நான்கரை ஆண்டுகள் முதல் 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு Java + Spring boot உள்ளிட்டவற்றுடன் Angular/ReactJs உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் டெக்னிக்கல் லீட்/சீனியர் டெக்னிக்கல் லீட் என்ற பொறுப்பில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 6ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினம் காலை 9 மணிக்கு கோவையில் உள்ள Hindustan College of Arts and Science கல்லூரிக்கு செல்ல வேண்டும்.
இந்த கல்லூரி என்பது Hindustan Gardens, Behind Nava India, Avinashi Road, Coimbatore 641 028 என்ற முகவரியில் உள்ளது. கோவையில் இண்டர்வியூ நடந்தாலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications