IT Jobs: எச்சிஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. பிப்ரவரி 21ல் இண்டர்வியூ.. சென்னை - ஹைதராபாத்தில் பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்தில் ஜாவா லீட் டெவலப்பர் (Java Lead Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ பிப்ரவரி 21ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது ஜாவா லீட் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம்செய்வாருக்கு ஜாவா 11 அல்லது அதற்கு மேலானவற்றில் கட்டாயம் அனுபவம் இருக்க வேண்டும்.

டொமைன் டிரைவன் டிசைன் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். 12 ஃபேக்டர் அப்ளிகேஷன்ஸ், சாலிட் பிரின்சிபிள் உள்ளிட்டவை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
என்னென்ன தகுதிகள்?
அதேபோல் மைக்ரோசர்வீசஸ் மற்றும் சர்வீஸ் ஆர்கெஸ்ட்ரோஷன் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் டேட்டாபேஸ் ஸ்கில்ஸ், ஆர்டிபிஎம்எஸ் மற்றும் NoSQL உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். GraphQL, gRPC, EDA, SAGA Circuit Breaker உள்ளிட்டவை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
ஜென்கின்ஸ் அனுபவம்
அதேபோல் Jenkins, GitHub Actions, GitLab CI, Azure DevOps, ArgoCD, Spinnaker உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். கிளவட் அனுபவம் இருப்பதோ, குறைந்தபட்சம் ஜிசிபி, அசூர், ஏடபிள்யூஎஸ், கிளவுட் நேட்டிவ் பிளாட்பார்ம்ஸ் உள்ளிட்டவற்றில் 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அனுபவம் எவ்வளவு?
மெசேஜிங் சிஸ்டம்ஸ் kafka, Pub/Sub,RabbitMQ உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருப்பது பிளஸ் பாயிண்டடாகும்.
பிரச்சனைகளை தீர்க்கும் திறன், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது உள்ளிட்டவை இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தப்டசம் 5 ஆண்டு முதல் 17 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
சென்னை - ஹைதராபாத்தில் பணி
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை மற்றம் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பிப்ரவரி 21ல் இண்டர்வியூ
இதற்கான இண்டர்வியூ பிப்ரவரி 21ம் தேதி நடக்கும். விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான நேரம், முகவரி அனுப்பி வைக்கப்படும். 10 ஆண்டுக்கும் மேலான அனுபுவம் கொண்டவர்கள் என்றால் நேரடியாக டெக்னிக்கல் டிஸ்கஷனில் இண்டர்வியூ தொடங்கும்.
5 முதல் ஒன்பதரை ஆண்டு அனுபுவம் கொண்டவர்கள் என்றால் Hackathon முறையில் இண்டர்வியூ இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications