IT JOBS:சென்னையிலேயே ஐடி வேலைவாய்ப்பு.. பிப்., 12, 14ல் சோழிங்கநல்லூரில் இண்டர்வியூ! அழைக்கும் HCL
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் பிப்ரவரி 12 மற்றும் பிப்ரவரி 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
நம் நாட்டின் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடி நிறுவனம் சார்பில் தொடர்ந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது 2 பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் ஓடிசி கலெக்சன் (OTC Collections) மற்றும் ஓடிசி டிஸ்புட் மேனேஜ்மென்ட்/டிஸ்புட் ரிசொல்யூஷன் (OTC Dispute Management/Dispute Resolution) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி என்ன?
இந்த பணிகளை விரும்புவோர் பிகாம் அல்லது எம்பிஏ (பைனான்ஸ்) படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் ஓடிசி கலெக்சன் பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் 9 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
OTC - DMS/Dispute Management, Order Management மற்றும் Accountes Receiables (Purchase Order/ Cash Application) உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
நைட் ஷிப்ட் உண்டு
நைட்ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அதேபோல் டார்க்கெட்டை முடிக்கும் நோக்கில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், டீம் பிளேயராகவும் செயல்பட தயாரக இருக்க வேண்டும்.
கஸ்டமர் கேர் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதேபோல் வாய்ஸ் பிரிவில் ஏதாவது கலெக்சன் அனுபவம் கொண்டவர்களும் விண்பண்பம் செய்யலாம்.
இண்டர்வியூ தேதி
தற்போதைய அறிவிப்பின் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ பிப்ரவரி 12 மற்றும் பிப்ரவரி 14 (வியாழன் மற்றும் சனிக்கிழமை)என்று 2 நாட்கள் நடைபெற உள்ளது. இரண்டு நாட்களும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இண்டர்வியூ இருக்கும்.
இண்டர்வியூ இடம்
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்பவோர் HCL Technologies, Tower 4, No.602/3/138, Special Economic Zone, Elcot -SeZ, Medavakkam High Road, Sholinganallur, Chennai - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூ செல்வோர் Resume, ஆதார், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை உடன் எடுத்து செல்ல வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications