IT Jobs: ‘கோடிங்' + அனுபவம் வேண்டாம்.. ரூ.3 லட்சம் சம்பளத்தில் சென்னை HCL-லில் வேலை.. ஏப்., 11ல் இண்டர்வியூ
சென்னை: சென்னை எச்சிஎல் அலுவலகத்தில் ஏப்ரல் 11ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த பணிக்கு 'கோடிங்' மற்றும் அனுபவம் தேவையில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்று வேலையை பெறலாம். ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும்.

கல்வி தகுதி என்ன?
அதன்படி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்கலைக்கழங்களில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பிஏ, பிஎஸ்சி, பிபிஏ என எந்த பிரிவில் டிகிரி முடித்திருந்தாலும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அதேவேளையில் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
ரூ.3 லட்சம் வரை சம்பளம்
இது Fresher-க்கான பணியாகும். இதனால் அனுபவம் தேவையில்லை. இதனால் படித்து முடித்து எந்த அனுபவமும் இல்லாதவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன தகுதிகள் வேண்டும்?
இருப்பினும் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். நன்கு கவனிக்கும் திறன் இருக்க வேண்டும். அதேபோல் டேட்டா என்ட்ரி மற்றும் டைப்பிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங்கிற்கு தயாராக இருக்க வேண்டும். அனலிட்டிக்கல் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். முக்கியமான நேரங்களில் முடிவுகள் எடுக்கும் திறமை இருக்க வேண்டும். அதேபோல் நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.
இண்டர்வியூ எங்கே?
அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ ஏப்ரல் 11 ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications