IT Jobs: வாரம் 2 நாள் விடுமுறை.. டிகிரி போதும் - அனுபவம் வேண்டாம்.. HCL-லில் நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் புராசஸ் அசோசியேட்/அசோசியேட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ நாளை (அக்டோபர் 31) மற்றும் நவம்பர் 1 என 2 நாட்கள் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தற்போது பலருக்கும் ஐடி துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது. ஆனால் பல ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இது ஐடி துறையில் நுழைய விரும்புவோருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் கூட தொடர்ந்து எச்சிஎல் நிறுவனம் சார்பில் ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் புராசஸ் அசோசியேட் /அசோசியேட் (வாய்ஸ் புராசஸ்) (Process Associate/Associate - Voice Process) பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய முன்அனுபவம் எதுவும் தேவையில்லை. ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்கார், பிசிஏ உள்ளிட்ட படிப்புகளை 2024 மற்றும் 2025ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அரியர்ஸ் என்பது இருக்க கூடாது.
மாறாக பிஇ, பிடெக் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் அலுவலகம் வந்து பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் வாகனத்தில் பிக்-அப் மற்றும் டிராப் வசதி உள்ளது.
பிற நிறுவனங்களில் பணியாற்றி வருவோர் என்றால் அங்கிருந்து வெளியேறியதற்கான relieving documents-யை வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணி என்பது US Shift அடிப்படையில் இருக்கும். இதனால் இரவு பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (அக்டோபர் 31) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 1) என 2 நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Special Economic Zone 33, ETA TECHNO PARK, Rajiv Gandhi Salai, Navalur, Tamil Nadu 600 130 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications