IT JOBS: மதுரையில் ஐடி வேலை.. எச்சிஎல் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

மதுரை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மதுரையில் உள்ள எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.

நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் டெல்லி அருகே உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ளது.

it-jobs-hcl-hiring-for-service-desk-analyst-role-in-madurai

இதுதவிர பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, மதுரையில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள நிறுவனத்தில் அடிக்கடி காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேவேளையில் மதுரையில் உள்ள நிறுவனத்தில் அவ்வப்போது ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் சர்வீஸ் டெஸ்க் அனலிஸ்ட் (Service Desk Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 3 ஆண்டுக்கு மேலான அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மதுரையை எடுத்து கொண்டால் விமான நிலையம் - மாட்டுத்தாவணி ரிங் ரோட்டில் இடையன்குளத்தில் எச்சிஎல் அலுவலகம் அமைந்துள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். திறமை மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடியலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூ தேதி, நேரம் உள்பட பிற விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+