IT JOBS: சென்னை - பெங்களூர் உள்பட 5 இடங்களில் காலியிடங்கள்.. அழைக்கும் HCL
சென்னை: எச்சிலெ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே, நொய்டா உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனமாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவை தலைமையிடாக கொண்டு நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது டெக்னிக்கல் லீட் (Technical Lead) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கான தகுதிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
தகுதிகள் என்னென்ன?
Preferred Experience ஆக FP&A அனுபவம் இருக்க வேண்டும். Bal Sheet, Inc Stmt, Cash Flow, Linkage உள்ளிட்டவற்றில் அக்கவுண்ட்டிங் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் FDMEE, EPM Automate, Essbase, Integrations உள்ளிட்டவை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதேபால் தனியாகவும், டீமாகவும் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஜுனியர் ஊழியர்களுக்கு ஹெல்ப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
அனுபவம் என்ன?
அதேபோல் அடிப்படை தகுதியாக (Basic Qualification) சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு 7+ ஆண்டுகள் ஃபுல் லைப்சைக்கிள் கான்பிகரேஷன் அனுபவம் இருக்க வேண்டும்.
குறிப்பாக Oracle EPM cloud/Hyperion/Essbase தெரிந்திருக்க வேண்டும். அதேபோல், பில்டிங் மெட்டா டேட்டா, டிசைனிங் வெப்ஃபார்ம்ஸ், டேட்டா ரிகான்சிலியேஷன் (Data Reconciliation), பில்டிங் டேஸ்போர்ட் மற்றும் பிசினஸ் ரூல்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்ப தேதி?
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட உள்ளது.
தற்போதைய அறிவிப்பில் விண்ணப்பம் செய்வதற்கான தேதி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
5 இடங்களில் நியமனம்
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பெங்களூர், ஹைதராபாத், சென்னை, நொய்டா, புனே உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications