IT Jobs:அரியர்ஸ் இருந்தாலும் வேலை.. அனுபவம் வேண்டாம்.. இன்று காலை சென்னையில் இண்டர்வியூ + பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ இன்று (மே 9) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கல்லூரி, பல்கலைக்கழங்களில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் பங்கேற்கலாம். தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது Voice and Semi Voice Process Freshers பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

கல்வி தகுதி என்ன?
இந்த இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதன்படி கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி முடித்தவர்கள் பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பட்ட மேற்படிப்பு என்றால் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, 2024 மற்றும் 2026ம் ஆண்டில் எம்காம் படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும். அரியர்ஸ் இருப்போரும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அதேவேளையில் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன திறமைகள் வேண்டும்?
இந்த பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை. ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்பவுண்ட்- அவுட்பண்ட் கா்ஸ் இருக்கும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேணடும். ஓபன் ஷிப்ட் முறையில் பணி இருக்கும். இதனால் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஷிப்ட் டைமிங்கில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
இன்று காலை இண்டர்வியூ
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது.
இண்டர்வியூ லோகேஷன்
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - AMB 6, South phase, Ambattu Industrial Estate, 8, Madras, Thiruvallur high Road, Ambattur, chennai, Tamil Nadu என்ற முகவரியில் நடைபெற உள்து. இண்டர்வியூ Face to Face முறையில் நடக்கும். தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்று நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications