IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் வேலை... சென்னை HCL நிறுவனத்தில் நாளை காலை இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை காலை 10.30 மணி முதல் மதியம் 3 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. டிகிரி முடித்தவர்கள், அரியர்ஸ் இருப்பவர்களும் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூவில் பங்கேற்போருக்கு அனுபவம் தேவையில்லை. தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது பேங்கிங் மற்றும் ஹெல்த்ஹேர் வாய்ஸ் - செமி வாய்ஸ் புராசஸ் (Banking & Healthcare Voice & Semi Voice Process) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it-jobs-hcl-hiring-freshers-passouts-for-banking-and-healthcare-voice-semi-voice-process-roles-on-a

இந்த பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

கல்வி தகுதி என்ன?

இந்த இண்டர்வியூவில் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் படிப்பை முடித்தவர்களும், அரியர்ஸ் வைத்திருப்போரும் பங்கேற்கலாம். எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்புகளை முடித்தவர்களும் பணிக்கு தயாராகலாம்.

இது Fresher-க்கான பணியாகும். இதனால் அனுபவம் தேவையில்லை. எனவே 2025ம் ஆண்டில் படிப்பை முடித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.

என்னென்ன திறமைகள் வேண்டும்?

இதுதவிர அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். Inbound மற்றும் Outbound கால்ஸ்க்கு தயாராக இருக்க வேண்டும். பணியானது UK Shift முறையில் இருக்கும். ரோட்டேஷனல் முறையில் ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.

என்னென்ன வசதிகள்?

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும். ஊழியர்களுக்கு இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை இண்டர்வியூ

இந்த பணிக்கான இண்டர்வியூ ஏப்ரல் 25 (நாளை) காலை 10.30 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூ Face to Face முறையில் நடக்கும். தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரிலேயே நியமனம் செ்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+