IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு அடித்த ஜாக்பாட்.. சென்னையிலேயே ஐடி வேலை ரெடி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் (IT Jobs) நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது Freshers - Process Associate/ Customer Service Reporesentative - Semi Voice Process - Power Point பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அனுபவம் வேண்டாம்
இந்த பணிக்கு அனுபவம் எதுவும் வேண்டாம். அதேவேளையில் விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் ஓராண்டுக்குள் பணி அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம். மேலும், ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது பட்ட மேற்படிப்பை முடித்திருந்தால் மட்டுமே போதும். பாட வாரியாக பார்த்தால் பிபிஏ, பிகாம், பிசிஏ, பிஎஸ்சி, எம்பிஏ, எம்ஏ, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை 2024 மற்றும் 2025ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
ஆங்கிலம் தெரிய வேண்டும்
அதேவேளையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஷிப்ட் எப்படி?
பவர் பாயிண்ட் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். மேலும் நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல், [email protected] முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
'கேப்' வசதி உண்டு
இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் பற்றிய தகவல் அனுப்பி வைக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
IT JOBS: சென்னையிலேயே ஐடி வேலை ரெடி.. மார்ச் 14ம் தேதியை மறக்காதீங்க... டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ் -
IT JOBS: 11 பிரிவுகளில் ஐடி வேலை.. மார்ச் 14ல் இண்டர்வியூ.. சென்னை - பெங்களூரில் வேலை -
IT JOBS: நாளை மதியம் சென்னையில் இண்டர்வியூ.. HCL-லில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. செம சான்ஸ் -
இந்திய அணுமின் கழகத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. எக்ஸாம் கிடையாது! -
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான் -
IT JOBS: மார்ச் 14ல் பெங்களூரில் இண்டர்வியூ.. பணி சென்னையில் தான்.. HCL தரும் சூப்பர் சான்ஸ் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்














Click it and Unblock the Notifications