IT JOBS: நாளை சென்னையில் இண்டர்வியூ.. டிகிரி மட்டுமே போதும்.. அழைக்கும் HCL
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு (IT Jobs) குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கலை மற்றும் அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் நாளை மதியம் நடைபெற உள்ள இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமை அலுவலகம் உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ளது.
எச்சிஎல் சார்பில் தற்போது புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

எந்த வகை பணி
எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது ஹெல்த்ஹேர் வாய்ஸ் புராசஸ்( Healthcare Voice Process) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது Freshers-க்கான வேலைவாய்ப்பாகும். இதனால் இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
கல்வி தகுதி
அதன்படி 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் இருக்க கூடாது. விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
நைட் ஷிப்ட்
அதேபோல், Inbound - Outbound வாய்ஸ் கால் பேச தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர்களின் கேள்விகளுக்கு விளக்க அளிக்க தயாராக இருக்க வேண்டும்.
எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். இரவு பணிக்கும் தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் ஷிப்ட் என்பது US முறையில் இருக்கும்.
நாளை இண்டர்வியூ
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நாளை (பிப்ரவரி 28 ) ம் தேதி மதியம் 1 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
சென்னையில் நியமனம்
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ETA 1 - Techno Park, Special Economic Zone, 33, Rajiv Gandhi Salai, Navalur Village, Tirupur Panchayat Unon, Navallur, Chennai 603 103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications