IT JOBS: B.sc, B.com, BBA, BCA போதும்.. சென்னை HCL-லில் வேலை.. நாளை - நாளை மறுநாள் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை (நவம்பர் 24) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 25) என 2 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இதில் பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட படிப்புகளை 2024, 2025ம் ஆண்டில் முடித்தவர்கள் பங்கேற்கலாம். முன்அனுபவம் தேயைில்லை. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல்-லில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது International Voice Process Fresher's என்ற பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு 2024, 2025ம் ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக விண்ணப்பத்தாரர்கள், பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ படிப்புகளை படித்தவராக இருக்க வேண்டும். மற்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
அதேபோல் விண்ணப்பத்தாரர்களுக்கு அரியர்ஸ் என்பது இருக்க கூடாது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. அனுபவம் கொண்டவர்கள் என்றால் ஓராண்டுக்கு மிகாமல் இன்டர்நேஷனல் பிபிஓவில் பணியாற்றி இருக்க வேண்டும். இந்த அனுபவசாலிகள் இண்டர்வியூவில் பங்கேற்றால் Relivig/Resignation Acceptance கடிதத்தை வைத்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அலுவலகம் வந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். ஷிப்ட் ரோட்டேஷனல் அடிப்படையில் இருக்கும். இதனால் எந்த வகை ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். Cab வசதி உள்ளது. இதன்மூலமாக பிக்அப்-டிராப் கிடைக்கும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (நவம்பர் 24) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 25) என 2 நாட்கள் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Spcial Economic Zone, Elcot-SeZ, Tower 4, Medavakkam High Road, Sholinganallur, Chennai 600 119 என்ற முகவரிக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications