IT JOBS: 3 பிரிவுகளில் காலியிடங்கள்.. அழைக்கும் சென்னை HCL.. ஜனவரி 27, 28 ம் தேதி இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் 3 பிரிவுகளில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஜனவரி 27, ஜனவரி 28 ஆகிய தேதிகளில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Financial Crime-யில் 3 பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Financial Crime Analyst, Financial Crime Senior Analyst, Financial Crime QA Analyst என 3 பிரிவுகளுக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it-jobs-hcl-tech-walk-in-drive-financial-crime-on-january-27-and-january-28-in-chennai

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பைனான்ஸ், அக்கவுண்ட்டிங் அல்லது தொடர்புடைய பிரிவில் இளநிலை டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். CAMS அல்லது CAME அல்லது CAMI சர்ட்டிபிகேட் வைத்திருக்க வேண்டும். அதேபோல் குறைந்தபட்சம் பைனான்சியல் கிரைம் அனலிசிஸ் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிக்கு சில முக்கிய விஷயங்கள் ஸ்கில் செட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருப்பதோடு, சாப்ட்வேர், சாப்ட்வேர்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவுமு், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டீமாகவும், தனியாகவும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

பைனான்சியல் கிரைம் பேக்எண்ட் ஆபரேஷன் மற்றும் குவாலிட்டி அசூரன்ஸ் மேனேஜ்மென்ட் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல்ஸ் ஸ்கில்ஸ் இருப்பதோடு, எக்ஸல் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் பவர் பிஐ உள்ளிட்டவையும் தெரிந்திருக்க வேண்டும். Anti Money laundering தொடர்பான பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் .சர்வசே விதிமுறைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் regulatory regimesகளான AMLD/OFAC/FATF தெரிந்திருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் இந்த பணிக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் 5+ ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

இதற்கான இண்டர்வியூ ஜனவரி 27, ஜனவரி 28 என்று 2 நாட்கள் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இது 100 சதவீதம் அலுவலக பணியாகும். ஹைபிரிட் வாய்ப்பு கிடையாது. இதனால் பணி நாட்களில் கண்டிப்பாக அலுவலகம் வந்து தான் வேலை செய்ய வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு இண்டர்வியூவுக்கான இடம் உள்பட பிற விவரங்கள் தெரிவிக்கப்படும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+