IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் ஐடி வேலை.. ஜனவரி 12 -13ல் சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் HCL
சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள், அரியர்ஸ் வைத்திருப்போர் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான இண்டர்வியூ ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது Freshers-களுக்கான பணியாகும். இதனால் அனுபவம் எதுவும் தேவையில்லை.

ஒருவேளை அனுபவம் கொண்டவர்கள் என்றால் ஓராண்டுக்குள் இருக்க வேண்டும். அதேவேளையில் அவர்கள் இண்டர்வியூவுக்கு வந்தால் அதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு அனுபவம் இல்லாதவர்கள் என்றால் சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். 2025ல் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அரியர்ஸ் இருந்தாலும் கவலையின்றி இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
மாறாக பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சி படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம். இருப்பினும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் இன்டர்பர்சனல் ஸ்கில் இருக்க வேண்டும். இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்ட் கால்ஸ்க்கு ரெடியாக இருக்க வேண்டும்.
எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பார்க்க தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட்ஷிப்ட்டுக்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு Cab வசதி உள்ளது. இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ ஜனவரி 12 மற்றும் ஜனவரி 13 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இண்டர்வியூ நடக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thrivallu High Road, Abattur, Chennai, என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். சோழிங்கநல்லூரில் எச்சிஎல் அலுவலகம் No 602/3/138, Elcot Economic Zone, Sholinganallur, Medavakkam High Road, Sholinganallur - 600 119, Chennai என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. இண்டர்வியூவுக்கு லேப்டாப் எடுத்து செல்ல அனுமதி கிடையாது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications