IT JOBS: அனுபவம் தேவையில்லை.. டிகிரி மட்டுமே போதும்.. சென்னை HCL-யில் பிப்ரவரி 2ம் தேதி இண்டர்வியூ
சென்னை: சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் பிப்ரவரி 2ம் தேதி (நாளை) காலை 11 மணி முதல் 3 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் அரியர்ஸ் வைத்திருப்போரும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த சான்ஸை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் Voice Process & Non Voice பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியை விரும்புவோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றிய விவரம் வருமாறு: இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தகுதி என்ன வேண்டும்?
அதன்படி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏதேனும் ஒரு டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். அதேவேளையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி ஐடி, கம்யூட்டர் சயின்ஸ், எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வோண்டும்.
நைட் ஷிப்ட் உண்டு
அதுமட்டுமின்றி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில இருக்க வேண்டும். இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்ட் கால்ஸ் இருக்கும். எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் கூட பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக இரவு பணிக்கும் ரெடியாக இருக்க வேண்டும்.
அனுபவம் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஓராண்டு வரை அனுபவம் கொண்டவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். வர்களிடம் அனுபவம் சார்ந்த சான்று கண்டிப்பாக இருக்க வேணடும். தற்போதைய அறவிப்பில் பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி , திறமை அடிப்படையில சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பிப்ரவரி 2ம் தேதி இண்டர்வியூ
மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் Cab வசதி வழங்கப்படும். இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ பிப்ரவரி 2ம் தேதி (நாளை) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic Zone, Sholinganallur, Medavakkam High road, Sholinganallur 600 119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ Face to Face முறையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவுக்கு லேப்டாப் எடுத்து செல்ல அனுமதி கிடையாது . பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications