IT JOBS: அனுபவம் தேவையில்லை.. சென்னை எச்சிஎல்-லில் மார்ச் 20ல் இண்டர்வியூ.. சோழிங்கநல்லூரில் பணி
சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ மார்ச் 20ம் தேதி (நாளை மறுநாள்) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்தவர்களும், அரியர்ஸ் வைத்திருப்பவர்களும் இந்த பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து Banking Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

யாரெல்லாம் இண்டர்வியூவில் பங்கேற்கலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம். இது Freshers-க்கான பணியாகும். இதனால் முன் அனுபவம் எதுவும் தேவையில்லை.
கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு 2025ல் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். 2026ல் கல்லூரி படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் பட்ட மேற்படிப்பை முடித்திருந்தாலும் இண்டர்வியூவியவில் அரியர்ஸ் இருப்பவர்களும் பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
அதன்படி ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் பிரிவில் எந்த படிப்பை முடித்திருந்தாலும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அரியர்ஸ் பற்றிய கவலை வேண்டாம். பட்ட மேற்படிப்பு என்றால் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்டவற்றை படித்திருக்க வேண்டும்.
பிஇ - பிடெக் வேண்டாம்
அதேபோல் 2026ம் ஆண்டில் பட்ட மேற்படிப்பை முடிப்போர் என்றால் எம்சிஏ, எம்எஸ்சி ஐடி, எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளை தவிர மற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?
விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்டர் கால் பேச தெரிந்திருக்க வேண்டும். பணி என்பது UK Shift அடிப்படையில் இருக்கும். ரோட்டேஷனல் ஷிப்ட் உண்டு. இதனால் இரவு பணிக்கும் தயாராக இருக்க வேண்டும்.
சம்பளம் + டிரெய்னிங்
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் வழியாக டிரெய்னிங் வழங்கப்படும். அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும்.அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் Cab-யில் சென்று வரலாம். மேலும் இன்டர்நநேஷனல் டிரெய்னர்ஸ் வைத்து டிரெய்னிங் வழங்கப்படும்.
மார்ச் 20ல் இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூர் மார்ச் 20ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ அம்பத்தூரில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai, Tamil Nadu என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இண்டர்வியூ Face to Face முறையில் நடைபெறும். லேப்டாப் எடுத்து செல்ல வேண்டும். ரெஸ்யூம் மற்றும் அரசு அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும். லேப்டாப், பென்டிரைவ் எடுத்து செல்ல அனுமதி கிடையாது.
சோழிங்கநல்லூரில் பணி
பணிக்கு தேர்வாகும் நபர்கள் No 602/3/138, Elcot Economic Zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications