IT JOBS: அரியர்ஸ் இருந்தாலும் வேலை.. நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னையில் வேலை.. அழைக்கும் HCL
சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (டிசம்பர் 19), நாளை மறுநாள் (டிசம்பர் 30) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்த பணி அனுபவம் இல்லாதவர்களும், அரியர்ஸ் வைத்திருப்பவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து Banking Domain பிரிவில் Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது Freshers-களுக்கான பணியாகும்.
இதனால் அனுபவம் எதுவும் தேவையில்லை. அதேவேளையில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அனுபவம் கொண்டவர்கள் என்றால் அதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும்.

அதேவேளையில் அனுபவம் இல்லாதவர்கள் என்றால் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் இன்டர்பர்ஷனல் ஸ்கில் இருக்க வேண்டும். இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்ட் கால்ஸ்க்கு தயாராக இருக்க வேண்டும்.
மேலும் இண்டர்வியூவுக்கு செல்வோர் கல்லூரியில் இளநிலை, பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அதேபோல் கல்லூரி படிப்பில் அரியர்ஸ் இருப்பவர்களும் பங்கேற்கலாம். பட்ட மேற்படிப்பு என்று எடுத்து கொண்டால் 2025ல் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
மாறாக பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சி படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பார்க்க தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட்ஷிப்ட்டுக்கு ரெடியாக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு Cab வசதி உள்ளது. இன்டர்நேரஷனல் டிரெய்னஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 29(நாளை), டிசம்பர் 30 (நாளை மறுநாள்) என 2 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 11 மணி முதல் 3 மணி வரை இண்டர்வியூ நடைபெறும். Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும்.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies- AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்கு லேப்டாப் எடுத்து செல்ல அனுமதி கிடையாது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். சோழிங்நல்லூரில் No 602/3/138/, HCL Elcot Economic Zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 in Chennai என்ற முகவரியில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications