IT Jobs: எலக்ட்ரிக்கல் + மெக்கானிக்கல் படித்தோருக்கு ஜாக்பாட்.. எச்சிஎல்-யில் ஏப்.,18ல் இண்டர்வியூ
சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் 2 பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஏப்ரல் 18 ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
தற்போது ஐடி துறையில் பணியாற்ற பலருக்கும் விருப்பம் உள்ளது. இதனால் ஒவ்வொருவரும் எந்த படிப்பை படித்தாலும் கூட தனியாக ஐடி துறை சார்ந்த படிப்புகளை படித்து அந்த துறைக்குள் என்ட்ரி கொடுக்கின்றனர்.
எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் படிப்புகளை படித்தவர்களாக இருந்தாலும் கூட தனியாக ஐடி சார்ந்த படிப்புகளை முடித்து தான் பணிக்கு உள்ளே நுழைய முடிகிறது. ஆனால் தற்போது எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு என்று பிரத்யேகமாக எச்சிஎல் நிறுவனம் காலியிடங்களை நிரப்புவதாக அறிவித்துள்ளது.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Maintainability Engineer/RCM2 Specialist பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அதேபோல் சம்பந்தப்பட்ட பிரிவில் 10+ ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக Power T&D பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர RCM2, IEC/EN Maintenance standarsd மற்றும் CMMS tools உள்ளிட்டவை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இதனால் மேற்கூறிய பிரிவுகளில் பணி அனுபவம் கொண்டவர்கள் என்றால் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாமல் விண்ணப்பம் செய்யலாம். இண்டர்வியூ சென்னையில் நடைபெற உள்ளதால் நியமனம் கூட அங்கேயே இருக்க வாய்ப்புள்ளது. தற்போது பணி நியமனம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் இண்டர்வியூவில் அதுபற்றிய விவரம் தெரிவிக்கப்படும்.
இதற்கான இண்டர்வியூ ஏப்ரல் 18 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை Elcot Campus-யில் New Cafeteria 2nd Floor-யில் இண்டர்வியூ இருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்ற முகவரிக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு https://lnkd.in/gN8XKxvb என்பதிலும் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications