போச்சு..மகள் கல்யாணத்தில் மனமுடைந்த செல்வப் பெருந்தகை! கண்டுகொள்ளாத டெல்லி தலைகள்! விஜய் சொன்னதாலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வி தான் காங்கிரஸ் வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசப்படும் தகவலாக உள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து அவர் விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது மகள் திருமண விழாவில் நடந்த சில சம்பவங்கள் மூலம் காங்கிரஸ் தலைமை மீதான அவரது அதிருப்தி அதிகரித்துள்ளதாம். மாநில தலைவரான தன் வீட்டுத் திருமணத்தில் முதல்வர் விஜய் மட்டுமல்ல, காங்கிரஸ் தலைவர்களே கலந்து கொள்ளாதது அவரை வேதனையில் ஆழ்த்தியுள்ளதாம்..

கடந்த ஜூன் 18-ஆம் தேதி செல்வப்பெருந்தகையின் மகள் திருமணம் சென்னை அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்ட திமுகவின் முக்கிய தலைவர்கள் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Congress Selvaperunthagai tvk

இதனால் அந்த திருமண விழா அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும் மாறியது. ஆனால், தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இருந்து முக்கிய தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

செல்வப்பெருந்தகை

குறிப்பாக செல்வப் பெருந்தகை தனது குடும்பத்துடன் நேரில் சென்று பத்திரிகை வைத்தும் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் அல்லது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை. இதனால் தவெக செல்வப் பெருந்தகை மீது கோபத்தில் இருப்பதன் விளைவு தான் இந்த புறக்கணிப்பு என்கின்றனர்.
மறுபுறம், இதனை அரசியல் நோக்கர்கள் பல்வேறு கோணங்களில் ஆராயத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ்

குறிப்பாக, செல்வப் பெருந்தகை வீட்டுத் திருமணத்தில் முதல்வர் விஜய் மட்டுமல்ல, காங்கிரஸ் தலைவர்களே கலந்து கொள்ளாததும் கவனிக்கத்தக்கது. காங்கிரஸ் தற்போது தவெக கூட்டணியில் இருந்தாலும், செல்வப்பெருந்தகை திமுகவுடன் நெருக்கமாக செயல்படுகிறார் என்ற கருத்து சில தலைவர்களிடையே நிலவி வருகிறது. அதனால் தான் தவெக தலைமை திருமண நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

ப. சிதம்பரம்

அதேநேரத்தில், காங்கிரஸ் மேலிடத்தின் முக்கிய தலைவர்களும் திருமண விழாவில் பெருமளவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். கட்சியின் தேசிய அளவிலான சில முக்கிய நிர்வாகிகள் வராததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக ராகுல், பிரியங்கா, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோரே கலந்து கொள்ளவில்லை.

செல்வப்பெருந்தகை ராஜினாமா

இந்த சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு செல்வப்பெருந்தகை மேலிடத்திடம் கடிதம் கொடுத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், கடந்த சில வாரங்களாக காங்கிரஸில் தலைமை மாற்றம் குறித்து தொடர்ந்து பேச்சுகள் நடந்து வருகின்றன.

திமுக கூட்டணி

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் கூட்டணிகள் மாறியுள்ளன. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தற்போது தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த மாற்றம் மாநில காங்கிரஸ் தலைமைக்கு பல்வேறு அரசியல் சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, புதிய மாநிலத் தலைவராக யார் வருவார் என்ற விவாதமும் தீவிரமடைந்துள்ளது.

மாணிக்கம் தாகூர்

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பெயர் மீண்டும் வலுவாக பேசப்படுகிறது. கட்சிக்குள் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வரும் நிலையில், புதிய தலைமுறையை முன்னிறுத்தும் முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மேலும், ஜோதிமணி மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களும் அவ்வப்போது அடிபடுகின்றன.

திமுகவில் இணையப் போகிறாரா?

இருப்பினும், டெல்லி மேலிடம் இறுதி முடிவை எடுக்கும் வரை எந்த பெயரையும் உறுதிப்படுத்த முடியாது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செல்வப்பெருந்தகையின் அடுத்த அரசியல் நகர்வு குறித்தும் பல்வேறு ஊகங்கள் நிலவி வருகின்றன. அவர் தொடர்ந்து காங்கிரஸிலேயே செயல்படுவாரா, அல்லது திமுகவில் இணையப் போகிறாரா? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+