கடவுள் செய்த சதி.. 11 வருஷம் பட்ட கஷ்டம்.. குடும்ப பிரச்சனை, கடன் நெருக்கடி பற்றி முதல் முறை பேசிய நடிகை ரோஜா
சென்னை: தமிழ் சினிமாவில் 90ஸ்களில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரோஜா. ரஜினிகாந்த், சரத்குமார், கார்த்திக், அர்ஜுன், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல ஹிட்டான படங்களில் நடித்திருக்கிறார். பிறகு அரசியலில் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் பலரும் அறியாத ஒரு பக்கம் இருக்கிறது என்று அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
இயக்குனர் ஆர் கே செல்வமணிவுடன் காதலில் இருந்த காலம் பற்றி பேசிய ரோஜா, எங்கள் காதல் விஷயம் வீட்டில் தெரிந்ததும் என் அப்பா உடனே சம்மதம் சொல்லிவிட்டார். செல்வமணி நல்ல மனிதர் என் பொண்ணை நல்லா பாத்துக்குவார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் கல்யாணம் பண்ணிக்கொள்ள எனக்கு மனசு வரவில்லை.
நடிகை ரோஜா பேட்டி
ஏனென்றால் நான் சினிமாவுக்கு வந்தபோது தான் அண்ணன் காலேஜ் முடித்தார். அப்போது நான் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு துணையாக வந்தார். அந்த சமயத்தில் அவர் எந்த வேலைகளுக்கும் முயற்சி செய்யவில்லை. காரணம் ஒரு பெண் பிள்ளையை தனியாக சினிமாவிற்கு அலைய வைக்க முடியாது என்று அவர் எனக்காக தான் என் கூடவே இருந்தார்.
அதேபோல என்னுடைய அம்மாவும் என்னை நம்பி தான் வாழ்ந்து வந்தார். அப்படி இருக்கும் போது நான் மட்டும் திருமணம் செய்து கொண்டு போய்விட்டால் அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்று யோசித்தேன். முதலில் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தேன் என்று உருக்கமாக பேசி இருக்கிறார்.

கடன் பிரச்சனை
மேலும் பேசும்போது என்னுடைய குடும்ப பொருளாதாரத்தை ஓரளவு செட்டில் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செல்வமணியுடன் அதிரடி படை படத்தை தயாரித்ததாகவும் ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போனதால் கடன் சுமை ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அந்த கடனை அடைத்து மீண்டும் வரவே எங்களுக்கு 11 வருஷம் ஆகிவிட்டது. அதனால் தான் எங்களுடைய திருமணம் 11 வருடம் தள்ளி போனது. அது கடவுள் செய்த சதியா? அல்லது நாங்கள் வாழ்க்கையில் இன்னும் நிறைய புரிதல் ஏற்பட வேண்டும் என்று கடவுள் யோசித்தாரா? என்று தெரியவில்லை.
பிரியாத காதல்
அந்த 11 வருடங்களிலும் செல்வமணி என்னை விட்டு போகவில்லை. முதல் படத்தில் இருந்து இன்று வரை அவர் தான் எனக்கு மிகப்பெரிய துணை. அந்த நம்பிக்கையில் தான் எங்களுடைய வாழ்க்கை இவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் ரோஜா பேசினார். ரோஜா செல்வமணி இருவரும் 1990களின் தொடக்கத்தில் செம்பருத்தி படத்தின் மூலம் தான் காதலிக்க தொடங்கினார்கள்.
பிறகு 2002 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது அன்ஷுமாலிகா மற்றும் கிருஷ்ண லோகித் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன. மேலும் அந்த பேட்டியில் ரோஜா பேசும் போது நான் என்னுடைய கணவருடன் இப்ப கூட ஏதாவது சின்ன தகராறு அல்லது சண்டையோ வந்தாலும் உடனே நான் உங்களுக்கு அப்பவே 11 வருஷம் டைம் கொடுத்தேன் நீங்க ஓடிப் போகாமல் இருந்துட்டு இப்ப எங்கேயும் போக முடியாது இப்படித்தான் இருக்கணும் என்று சொல்லுவேன் என்று ஜாலியாக பேசி இருக்கிறார்.














Click it and Unblock the Notifications