குக் வித் கோமாளியில் நடந்த அடுத்த சம்பவம்.. கதறி அழுத ரோஜா.. இந்த சீசனுக்கு என்ன ஆச்சு? அடி மேல அடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி (Cooku with Comali) நிகழ்ச்சி எப்போதும் சிரிப்பு, கலாட்டா, கலகலப்புக்காக ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும், சமீபகாலமாக இந்த நிகழ்ச்சி சர்ச்சைகளாலும் பேசுபொருளாகி வருகிறது.

சூட்டிங் ஸ்பாட் சண்டை
முன்னதாகவே இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து "வாட்டர்மெலன் ஸ்டார்" திவாகர் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகழ், கானா வினோத் மற்றும் மாகாபா ஆனந்த் உள்ளிட்டவர்கள் தன்னை தாக்கியதாக அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் இன்னும் முழுமையாக அடங்காத நிலையில், தற்போது வெளியான புதிய ப்ரோமோ வீடியோ மீண்டும் இந்த நிகழ்ச்சியை பேசுபொருளாக்கியுள்ளது.
குக் வித் கோமாளி ப்ரோமோ
இந்த வாரம் "நம்ம வீட்டு கல்யாணம்" என்ற தலைப்பில் டாஸ்க் நடத்தப்படுகிறது. அந்த ப்ரோமோவில் அரவிந்த் சேசு தனது சட்டையில் தன் பெற்றோர் மற்றும் மனைவியின் புகைப்படங்களை அச்சிட்டு கொண்டு வருகிறார். அதை பார்த்த நடுவராக இருக்கும் ரோஜா, "ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று கேட்க, அதற்கு அரவிந்த் தனது திருமணத்திற்கு அப்பா-அம்மா வர முடியாத நினைவால் தான் இப்படி செய்ததாக உருக்கமாக பகிர்ந்துகொள்கிறார்.
புகழ் அழுகை
அந்த தருணமே நிகழ்ச்சியில் ஒரு எமோஷனலான சூழ்நிலையை உருவாக்குகிறது. இதை கேட்டு அருகில் இருந்த புகழ் தன்னுடைய அப்பாவை நினைத்து உடைந்து அழத் தொடங்குகிறார். சமீபத்தில் தந்தையை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக வெளிவராத அவர், அந்த நினைவால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டது ப்ரோமோவில் தெளிவாக தெரிகிறது.
நடிகை ரோஜா அழுகை
புகழை ஆறுதல் கூற முயன்ற ரோஜாவும், "நீ அழுறதை பார்க்கும்போது எனக்கும் அழுகை வருகிறது" என்று கூறி, அழுதபடியே தன்னுடைய வாழ்க்கை நினைவுகளையும் பகிர்ந்துகொள்கிறார். "எனக்கு என் அப்பாவை ரொம்ப பிடிக்கும்... ஆனா அவர் என் கல்யாணத்தை பார்க்கவே இல்லை... அதனால் அப்பாவைப் பற்றி பேசினாலே எனக்கு அழுக வந்துடும்" என்று அவர் கதறி அழுவது அந்த ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோ வெளியாகியவுடன் சமூக வலைத்தளங்களில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. சிலர் இந்த காட்சியை பார்த்து உண்மையாகவே மனம் உருகி, "இது ஒரு உண்மையான உணர்வு" என்று ஆதரவு தெரிவிக்கின்றனர். அதே சமயம் மற்றொரு பகுதி, "விஜய் டிவி நிகழ்ச்சிகளில் இப்படிப் பட்ட அழுகாச்சி சென்டிமென்ட் சீன்கள் அடிக்கடி வருகிறது... TRPக்காகவே இப்படி காட்டுகிறார்கள்" என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததாக கூறப்படும் சண்டை, திவாகர் அளித்த புகார் ஆகியவை இன்னும் விவாதமாக இருக்கும் சூழலில், இந்த ப்ரோமோவும் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிரிப்பு நிகழ்ச்சியாக தொடங்கிய 'குக் வித் கோமாளி', இப்போது சர்ச்சைகளும் அழுகை காட்சிகளும் கலந்த நிகழ்ச்சியாக மாறிவிட்டதா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படியாக, ஒரு பக்கம் கலாட்டா, மற்றொரு பக்கம் சர்ச்சை - இந்த இரண்டிற்கும் நடுவில் தான் தற்போது இந்த நிகழ்ச்சி பயணம் செய்து கொண்டிருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications