செம்மொழி பூங்கா ரூ.40 கோடி விவகாரம்.. கோவை மாநகராட்சி கூட்டத்தில் அமளி.. 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகராட்சி கூட்டத்தில் செம்மொழி பூங்காவில் ரூ. 40 கோடி முறைகேடு நடைபெற்றது குறித்து மேயர் பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தனர். இதனால், காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே மாமன்ற கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 5 கவுன்சிலர்களை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி 2 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் இன்று துவங்கியது. மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும், மண்டல அலுவலகங்களில் மனை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

chaos-erupts-at-coimbatore-corporation-council-meeting-five-councillors-suspended-for-two-months

இதுகுறித்த முறையான அறிவிப்பை மாநகராட்சி அதிகாரிகள் மண்டல தலைவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்கவில்லை என கூறி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அவருடன் திமுக கவுன்சிலர்களும் ஆணையர் முன்பாக நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உள்ளிட்ட சில கவுன்சிலர்கள் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு செம்மொழி பூங்காவில் ரூ. 40 கோடி முறையீடு நடைபெற்றது குறித்து மேயர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் குடிநீர் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் சின்ன வேடம் பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைக்க கூடாது என கூறி அவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்ற கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரிக்கும், திமுக பெண் கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திமுக பெண் கவுன்சிலர்கள் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியின் சேலையை பிடித்து இழுத்தனர். அதனை மீறி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மேடையில் ஏறி நின்று மாநகராட்சி ஆணையருடன் வாக்கு வாத்தில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து, கடும் அமளி ஏற்பட்டதால் மாமன்ற கூட்டத்தை 12 மணி வரை ஒரு மணி நேரம் ஒத்திவைத்து மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார். மேலும், கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமமூர்த்தி, பூபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சாந்தி, பிரபா ரவீந்திரன் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி ஆகியோரை 5 பேரை இரண்டு மாத காலத்துக்கு பணியிடை நீக்கம் செய்து மேயர் ரங்கநாயகி நடவடிக்கை எடுத்தார். மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதம் தள்ளுமுள்ளு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+