நாகார்ஜுனா மண்டபத்தையே இடித்து தள்ளிய டீம் HYDRA.. ஹிட்லர் தான் இன்ஸ்பிரேஷனாம்! இது தெரியுமா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அம்மாநில அரசு ஹைட்ரா என்ற தனிப்பிரிவை வைத்துள்ளது. இந்த பிரிவு ஹிட்லரில் இருந்து ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. உண்மையில் ஹிட்லரிடம் இதுபோல ஒரு டீம் இருந்ததா.. இதன் பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம்!

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை ஆரம்பித்துவிட்டது. நமது நாட்டில் பல நகரங்களில் லேசாக மழை பெய்தாலே சாலைகளில் மோசமாக நீர் தேங்கும் சூழலே இருக்கிறது. இதுபோல நீர் தேங்க ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணமாக உள்ளன. அதை அகற்ற பல்வேறு மாநிலங்களும் பல நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றன.

hitler hyderabad HYDRAA

தெலுங்கானா

அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் HYDRA என்ற பிரிவு இருக்கிறது. இவர்கள் தான் பருவமழை காலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது முதல் மீட்பு பணிகள் வரை அனைத்தையும் மேற்கொள்வார்கள். மழை ஆரம்பித்தாலேயே இந்த ஹைட்ரா பிரிவினர் ஹைதராபாத்தின் முக்கிய பகுதிகளில் களமிறங்கிவிடுவார்கள். தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

இந்த ஹைட்ரா குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில கருத்துகளை கூறியிருந்தார். இந்த ஹைட்ரா எப்படி உருவானது இதன் பின்னணி குறித்த தகவல்களை பகிர்ந்திருந்தார். ஹைதராபாத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக செயல்பட்டு வரும் ஹைட்ரா அமைப்பின் பெயர் குறித்து பேசிய அவர், "இந்த விவகாரத்தில் ஹிட்லரிடம் இருந்து இன்ஸ்பிரேஷன் அடைந்து இந்த பெயரை வைத்தேன்" என்று கூறியிருந்தார்.

ஹிட்லர்

அவர் மேலும், "ஹைட்ரா என்பது ஹிட்லருக்கு மிகவும் பிடித்த வார்த்தை. அவரது முக்கிய குழுவின் பெயர் ஹைட்ரா. அந்த குழு யாரையும் அழிக்கக்கூடிய திறன் கொண்டதாக இருந்தது. அதனால் தான் அந்த பெயரில் இருந்து ஈர்க்கப்பட்டு HYDRAA என பெயரிட்டேன்" என்று பேசியிருந்தார். இதில் சர்ச்சைக்கு என்ன இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் வரும்.

உண்மை என்ன

உண்மையில் ரேவந்த் ரெட்டி சொன்னது போல ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரிடம் "ஹட்ரா" என்ற பெயரில் எந்த டீமும் இருந்ததில்லை. ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் ஜெர்மனி ராணுவத்தில் பல்வேறு ராணுவ குழுக்கள், அதிரடி படையினர் இருந்தாலும் கூட ஹட்ரா என்ற பெயரில் எந்தவொரு டீமும் இல்லை என்பதே உண்மை!

உண்மையில் ஹைட்ரா என்பது மார்வெல் காமிக்ஸ் மற்றும் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் இடம்பெறும் கற்பனை அமைப்பாகும். இந்த அமைப்பு கார்டூனில் நாஜி ஜெர்மனியுடன் தொடர்புடையதாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். ஆனால், உண்மையில் அப்படியொரு அமைப்பே இல்லை. இதனால் ஹிட்லரின் வரலாற்றையும், மார்வெல் கதாபாத்திரத்தையும் ரேவந்த் ரெட்டி குழப்பி கொண்டதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

ஹைட்ரா

பெயரை சுற்றிலும் இதுபோல குழப்பம் இருந்தாலும் ஹைட்ரா அமைப்பு பல ஆக்கிரமிப்புகளை வெற்றிகரமாக நீக்கியுள்ளது. இந்த ஹைட்ரா அமைப்பு கடந்த 2024ம் ஆண்டு தெலுங்கானா அரசால் உருவாக்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள ஏரிகள், பூங்காக்கள், அரசு நிலங்கள் மற்றும் பொதுச் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பதே அதன் முக்கிய நோக்கமாகும். இதுவரை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள அரசு நிலங்கள் மற்றும் சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு சில மாதங்களில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதியை இந்த அமைப்பு இடித்து தள்ளியது. ஏரியை ஆக்கிரமித்துக் கட்டியதாக சொல்லி மண்டபம் இடிக்கப்பட்டது. இதுபோல பல ஆக்கிரமிப்புகளை ஹைட்ரா அமைப்பு அகற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+