IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் வேலை.. அனுபவம் வேண்டாம்.. நாளை முதல் 3 நாள் சென்னை HCL-லில் இண்டர்வியூ
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புராசஸ் அசோசியேட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள், அரியர்ஸ் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் தேவையில்லை. இதற்கான இண்டர்வியூ நவம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது புராசஸ் அசோசியேட் (Process Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இளநிலை அல்லது முதுநிலை பிரிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
முதுநிலை படிப்பு என்றால் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்பை முடித்திருக்க வேண்டும். மாறாக பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் மேற்கூறிய படிப்புகளை தவிர்த்து இளநிலை, முதுநிலை படிப்பில் அரியர்ஸ் இருந்தாலும் பராவியில்லை. அவர்களும் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். மேலும் எந்த பணி அனுபவமும் தேவையில்லை. ஒருவேளை அனுபவம் இருந்தால் ஓராண்டு எக்ஸ்பிரியன்ஸ் உள்ளவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அவர்கள் கண்டிப்பாக அனுபவத்துக்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அதற்கான உரிய ஆவணங்களுடன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஷிப்ட் என்பது ரோட்டோஷனல் முறையில் இருக்கும் இருக்கும். இதனால் இரவு பணி செய்யவும் தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Cab வசதி உள்ளது. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் வாகனத்தில் பிக்-அப் மற்றும் டிராப் வசதி உள்ளது.
இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பில் சம்பளம் குறித்து Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 20 (நாளை), நவம்பர் 21, நவம்பர் 22 என 3 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் லேப்டாப் எடுத்து செல்ல கூடாது. இண்டர்வியூ HCL Technologies - AMB 6, South phase, Ambattur Industrial Estate, 8, Madras,Thiruvalur High Road, Ambattur, Chennai, Tamil Nadu என்ற முகவரியில் நடைபெற .ள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் 2 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூரில் உள்ள அலுவலகங்களில் நியமனம்செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து நாளை முதல் நடக்கும் 3 நாள் இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications