HCL IT Jobs: அனுபவம் வேண்டாம்.. அக்டோபர் 26ம் தேதி இண்டர்வியூ.. சென்னையில் வேலை ரெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை மறுநாள் (அக்டோபர் 26) சென்னையில் நடைபெற உள்ளது.

hcl-walk-in-drive-for-process-associate-roles-on-octobar-26

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேவையான தகுதிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

விண்ணப்பம் செய்வோர் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். 2025, 2026ம் ஆண்டில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

அதேவேளையில் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்டெக், எம்எஸ்சி (ஐடி), ஐடி சார்ந்த இன்ஜினியரிங் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம். மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

கஸ்டமர் சர்வீஸ், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் மற்றும் ஆர்க்கனைஜேஷனல் ஸ்கில் இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு 0-1 ஆண்டு பணி அனுபவம் வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட தகுதிகள் இருந்து அனுபவம் இல்லாவிட்டாலும் விண்ணப்பம் செய்யலாம். இல்லாவிட்டால் ஓராண்டு அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இண்டர்வியூ என்பது நாளை மறுநாள் (அக்டோபர் 26) சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னையில் Sandhya Infocity,OMR, Rajiv Gandhi Salai, Navalur, Chennai 600 130 என்ற முகவரியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளர்கள் விண்ணப்பம் செய்து நாளை மறுநாள் இந்த முகவரிக்கு சென்று இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+