IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் நாளை (மார்ச் 27) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 26) ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல்-லில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்வகையில் தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து US Headlcare (Voice) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? இண்டர்வியூ எங்கே நடக்கிறது? என்பது பற்றிய முக்கிய விவரங்கள் வருமாறு:
என்னென்ன தகுதிகள்?
இந்த பணியை விரும்புவோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் நியூட்டலாக பேச தெரிந்திருந்திருந்தாலும் நாளடைவில் US Culture முறையில் பேச தயாராக இருக்க வேண்டும். கஸ்டமர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தெரிந்தருக்க வேண்டும். அதேபோல் பிரண்ட்லியாக பழகும் திறமை இருக்க வேண்டும்.
டேட்டா என்ட்ரி - டைப்பிங் ஸ்கில்ஸ்
நன்கு கவனிக்கும் திறமை, டேட்டா என்ட்ரி, டைப்பிங் ஸ்கில்ஸ் உள்ளிட்டவை இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங்கிற்கு தயாராக இருக்க வேண்டும். டீம் பிளயேராகவும், தனியாகவும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். ஸ்கில்செட்டாக AR Caller (Voice Process) - Health Care இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 4 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஷிப்ட் - சம்பளம் எப்படி?
மேலும் அதுமட்டுமின்றி எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். இரவு பணிக்கும் தயாராக இருக்க வேண்டும். ஷிப்ட் என்பது US முறையில் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றிகடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அனுபவம், திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
இண்டர்வியூ எங்கே?
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (மார்ச் 27) ம் தேதி முதல் நாளை மறுநாள் (மார்ச் 28) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL TECH, Tower 4, Sholinganallur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அப்போது ரெஸ்யூம் EPFO Service History ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications