IT Jobs:சோழிங்கநல்லூரில் ஐடி வேலை.. சென்னை HCL அலுவலகத்தில் நாளை – நாளை மறுநாள் இண்டர்வியூ!
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து நாளை (ஏப்ரல் 16) மற்றும் நாளை மறுநாள் (ஏப்ரல் 17) என 2 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து Voice Process & Semi Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

கல்வி தகுதி என்ன?
இந்த பணியை விரும்புவோருக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படித்திருந்தால் போதும். 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். மாறாக இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன திறமைகள் வேண்டும்?
இதுதவிர ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட்ஷிப்ட் பார்க்க ரெடியாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சம்பளம் என்ன?
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். ஊழியர்களுக்கு அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும். இதுதவிர ஊழியர்களுக்கு இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 16-17 ல் இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 17 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இண்டர்வியூ Face to Face முறையில் இருக்கும்.
சோழிங்கநல்லூரியிலேயே நியமனம்
தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள அலுவலகத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர். இண்டர்வியூவிற்கு செல்வோர் லேப்டாப் எடுத்து செல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications