IT JOBS: அரியர்ஸ் இருந்தாலும் வேலை.. HCL-லில் இன்று முதல் 3 நாள் இண்டர்வியூ.. சென்னையில் பணி
சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ இன்று முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. டிகிரி முடித்தவர்களும், அரியர்ஸ் வைத்திருப்பவர்களும் கூட இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல்-லில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு பிஇ, பிடெக் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை - அறிவியல் பிரிவினர்
மாறாக கலை மற்றும் அறிவியல் பிரிவு உள்பட பிற டிகிரி படிப்புகளை முடித்தவர்களும், அரியர்ஸ் வைத்திருப்போரும் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
அனுபவம் வேண்டாம்
இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. அனுபவம் கொண்டவர்கள் என்றால் ஓராண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் அதற்கான சான்றிதழ்களுடன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். மேலும் பணியை விரும்புவோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். Inbound and Outbound call இருக்கும்.
ஷிப்ட் எப்படி?
அனைத்து ஷிப்ட்டிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட்ஷிப்ட்டும் இருக்கும். தற்போதைய அறிவிப்பின் படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அலுவலகத்தில் இருந்து Cab வசதி உள்ளது. இண்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலம் பயிற்சி வழங்கப்படும்.
3 நாள் இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ இன்று (பிப்ரவரி 5) தொடங்கி பிப்ரவரி 7 ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த 3 நாட்களும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை இண்டர்வியூ நடக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோம் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Rd, Ambattur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
2 இடங்களில் நியமனம்
அங்கு இண்டர்வியூ என்பது Face to Face முறையில் நடக்கும். இண்டர்வியூவுக்கு செல்வோர் லேப்டாப் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் No 602/3/138, Elcot Economic Zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திலும், நாவலூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்திலும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications