IT JOBS: டிகிரி மட்டுமே போதும்.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலை.. பிப்.,28 இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் (IT Jobs) குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பிப்ரவரி 28 ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்.

நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, மதுரையில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

it-jobs-hcl-walk-in-interview-for-service-desk-specialist-roles-on-february-28

எந்த பிரிவில் பணி

இந்நிலையில் தான் தற்போது எச்சிஎல் சார்பில் சர்வீஸ் டெஸ்க் ஸ்பெஷலிஸ்ட் (Service Desk Specialist) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கண்டிப்பாக டிகிரி முடித்திருக்க வேண்டும்.

என்னென்ன தகுதி வேண்டும்

ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஆக்டிவ் டைரக்டரி மற்றும் ஆர்எஸ்ஏ டோக்கன் மேனேஜ்மென்ட் உள்ளிட்டவற்றில் நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும். அதேபோல் விபிஎன், சிட்ரிக்ஸ், விடிஐ உள்ளிட்டவற்றில் டிரபிள்சூட்டிங் திறமை இருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ் தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாம் பிரைமரி ஸ்கில்செட்டாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஷிப்ட் எப்படி இருக்கும்

அதேபோல் செகன்டரி ஸ்கில்செட்டாக ரிமோட் டெஸ்க்டாப் சப்போர்ட் ஸ்கில்ஸ், எஸ்கலேஷன் புரோசிடர்ஸ், மற்றும் புராசஸ் கம்பிளியன்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அக்யூரேட் வொர்க் லாக்ஸ் மற்றும் டாக்குமென்டேஷன் தெரிந்திருக்க வேண்டும். மேலும் இன்டர்நேஷனல் வாய்ஸ் பேஸ்ட் சர்வீஸ் டெஸ்க் சப்போர்ட்டில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். 24X7 என்ற அடிப்படையில் ஷிப்ட் செய்ய தயாரக இருக்க வேண்டும்.

பிப்ரவரி 28 ம் தேதி இண்டர்வியூ

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். திறமை மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ பிப்ரவரி 28 ம்தேதி நடைபெற உள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். அதன்பிறகு இண்டர்வியூ நடக்கும் இடம், தேதி உள்ளிட்டவை தெரிவிக்கப்படும். தற்போதைய அறிவிப்பில் பணி நியமனம் செய்யப்படும் இடம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அநேகமாக சென்னையிலேயே நியமனம் செய்யப்படலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+