IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா?
சென்னை: பிரபல ஐடி நிறுவனமாக செயல்பட்டு வரும் ஹெக்சாவர் டெக்னாலஜியில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ மார்ச் 21 ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சென்னை மற்றும் புனேவில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

நம் நாட்டை சேர்ந்த ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஹெக்சாவர் டெக்னாலஜிஸ் (Hexaware Technologies) செயல்பட்டு வருகிறது. நவி மும்பையை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? என்பது தொடர்பாக இங்கு பார்க்கலாம்.
ஸ்கில்செட் என்ன வேண்டும்?
Hexaware Technologies நிறுவனத்தின் தற்போதைய அறிவிப்பில் 3 வகையான ஸ்கில்செட் உள்ளவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
* .NET Core, SQL, MVC (With Angular or React)
* .NET Core + Azure Paas
* Node.JS + React.Js ஆகிய 3 ஸ்கில்செட் இருக்க வேண்டும். அதோடு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அனுபவம் என்ன?
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் 6-12 ஆண்டு என்பதால் ஒவ்வொருவருக்கும் சம்பளம் மாறுபடும். தகுதி மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
மார்ச் 21ம் தேதி இண்டர்வியூ
பணிக்கான இண்டர்வியூ மார்ச் 21ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ சென்னை மற்றும் புனே என 2 இடங்களில் நடைபெற உள்ளது. சென்னையை எடுத்து கொண்டால் H-5, SIPCOT IT Park, Navlur Post, Siruseri 603 103 என்ற முகவரியிலும், புனேவை எடுத்து கொண்டால் Hexaware Technologies, Rajiv Gandhi Infotech Park, MIDC - SEZ, Phase - III, Hinjewad 411 057 என்ற முகவரியிலும் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
இண்டர்வியூ எப்படி?
இண்டர்வியூ Face to Face முறையில் நடைபெற உள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் நேரடியாக பங்கேற்று பயன் பெறலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணி நியமனம் செய்யப்படும் இடம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதை பற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications