IT Jobs: அனுபவம் வேண்டாம்.. சென்னையில் ஐடி வேலை ரெடியா இருக்கு.. உடனே விண்ணப்பிக்கலாம்
சென்னை: சென்னை டிஎல்எஃப் ஐடி பார்க்கில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன் அனுபவம் வேண்டாம். ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்தாலே போதும் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் பல்வேறு முக்கிய ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எச்சிஎல், காக்னிசண்ட், ஆக்சென்ச்சர் உள்பட பல நிறுவனங்கள் உள்ளன. அதேபோல் ஏராளமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் சென்னையில் தங்களின் கிளைகளை தொடங்கி உள்ளன.

அந்த வகையில் சென்னை டிஎல்எஃப் ஐடி பார்க்கில் உள்ள நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது Presales Executive பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு 0 - 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி இன்ஜினியரிங், பிசினஸ், ஐடி அல்லது தொடர்புடைய பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸில் Word,Excel, Power Point உள்ளிட்டற்றில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பிரிட்டன் ஷிப்டில் வேலை இருக்கும். அதன்படி மதியம் 1.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை வேலை என்பது இருக்கும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை டிஎல்எஃப் ஐடி பார்க்கில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்.
இந்த பணிக்கான அறிவிப்பை Photon என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு டிஎல்எஃப் ஐடி பார்க்கில் உள்ள நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இந்த பணிக்கான அறிவிப்பு வெளியாகி 3 நாட்கள் கடந்து விட்டது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications