IT Jobs: சென்னை - கோவையில் ஐடி வேலை.. IBM தரும் அசத்தலான சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமாக உள்ள ஐபிஎம் நம் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னை, கோவை, பெங்களூர், கொச்சி உள்பட 18 இடங்களில் காலியாக உள்ள அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎம் (IBM) உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது Entry Level பணியாகும். இந்த பணிக்கு தேவையான தகுதிகள் உள்பட பிற முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதனை சார்ந்த துணை படிப்புகளை முடித்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக 2024 அல்லது 2025ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. அதேவேளையில் 6 சிஜிபிஏ 60% வைத்திருக்க வேண்டும்.
என்னென்ன தகுதிகள் வேண்டும்?
இந்த பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை. அதேவேளையில் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், பிழையின்றி எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.புரோகிராமிங் லேங்குவேஜ்களான Java, C++, Python, Node.Js உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். சாப்ட்வேர் டெவலப்மென்ட் லைப் சைக்கிள் கான்செப்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதேபோல் இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். மேலும் வெப் டெவலப்மென்ட்க்கு ஸ்கிரிப்டிங் லேங்குவேஜ்களான Ruby அல்லது Groovy தெரிந்திருக்க வேண்டம்.
18 இடங்களில் நியமனம்
எல்லாவற்றுக்கும் மேலாக நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதவிர பெங்களூர், மைசூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, கொச்சி, புவனேஸ்வர், டெல்லி, அகமதாபாத், லக்னோ, கொல்கத்தா, குர்கிராம், நொய்டா, விசாகப்பட்டினம்,நவி மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றிய விபரம் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறித்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழியாக உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications