IT Jobs: ரூ.21 லட்சம் வரை சம்பளம்.. அனுபவம் தேவையில்லை.. இன்போசிஸ் பணிக்கு ஏப்ரல் 13 கடைசி நாள்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 4 பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2024, 2025ம் ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்து அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 13 கடைசி நாளாகும்.
இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் எல் 1 (Specialist Programmer L1), ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் எல் 2 (Specialist Programmer L2), ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் எல் 3 (Specialist Programmer L3) மற்றும் டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் (Digital Speicalist Engineer) என மொத்தம் 4 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது Freshers-க்கான வேலைவாய்ப்பாகும். இதனால் பணி அனுபவம் என்பது கிடையாது. இந்த பணிகளுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
என்னென்ன தகுதிகள்?
இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி (5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு) உள்ளிட்டவற்றில் கம்யூட்டர் சயின்ஸ்,இன்பர்மேஷன் டெக்னலாஜில, ஏஐ/எம்எல், ரெக்கார்ட்ஸ் சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, இசிஇ, ட்ரிபிள்இ மற்றும் கம்யூட்டர் சயின்ஸ் சார்ந்த அலைட் பிரிவு படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் கட்டாயமாக 2024, 2025ம் ஆண்டுகளில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் என்ன?
இதில் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் எல் 3 பணிக்கு ஆண்டுக்கு ரூ.21 லட்சம் வரையும், ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் எல் 2 பணிக்கு ரூ.16 லட்சம் வரையும், ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் எல் 1 பணிக்கு ரூ.10 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படும். டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் (டிஎஸ்இ) பணிக்கு ஆண்டுக்கு ரூ.6.26 லட்சம் சம்பளத்துடன் ஜாயினிங் போனஸாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும்.
ஏப்ரல் 13 கடைசி நாள்
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 13ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்வோர் இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூ 2 ரவுண்ட்டுகளாக நடக்கும். முதல் ரவுண்ட் என்பது Writtern Assessment Online முறையில் டக்கும். 2வது ரவுண்ட் என்பது In Person Assessment + Interview (3 hrs each, programming Foucsed) ஆக இருக்கும். இதனால் விருப்பம் உள்ளவர்கள் மிஸ் செய்யாமல் இந்த சான்ஸை பயன்படுத்தி கொள்ளலாம்.
கண்டிஷன் என்ன?
அதேவேளையில் விண்ணப்பம் செய்வோருக்கு 2 முக்கிய கண்டிஷன்கள் உள்ளன. அதன்படி விண்ணப்பம் செய்வோர் கடைசி 6 மாதத்தில் இன்போசிஸில் எந்த இண்டர்வியூவிலும் பணியாற்றி இருக்க கூடாது என்பது முதல் கண்டிஷனாகும். அதேபோல் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருவோர் இந்த இண்டர்வியூவில் பங்கேற்ற வேண்டாம் என்பது 2வது கண்டிஷன் என வேலைவாய்ப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை இண்டர்வியூ.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications