IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. சென்னை - ஹைதராபாத் உள்பட 5 இடங்களில் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, ஹைதராபாத், புனே உள்பட 5 இடங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிசிஎஸ் ஐடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு சென்னை உள்பட நம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன.

it-jobs-tcs-hiring-for-azure-data-engineer-for-4-locations-including-chennai

இந்நிலையில் தான் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Azure Data Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு Core Azure Services-யில் ஆர்க்கெஸ்ட்ரேஷனுக்கான அசூர் டேட்டா பேக்டரி, டேட்டா டிரான்ஸ்பார்மேஷனுக்கான அசூர் டேட்டா பிரிக்ஸ் (PySPark), அசூர் டேட்டா லேக் ஸ்டோரேஜ் உள்ளிட்டவற்றில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.

என்னென்ன தகுதிகள் வேண்டும்?

அதேபோல் அசூர் ஸ்நாப்ஸ் அனலிட்டிக்ஸ் ( Azure Synapse Analytics) அல்லது அசூர் எஸ்க்யூஎல் டேட்டாபேஸ் தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி ELT/ELT பைப்லைன்ஸ், டேட்டா மேனிபுலேஷனுக்காக பைத்தான், எஸ்க்யூஎல் அட்வான்ஸ்ட் டேட்டா குயரிங் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

DevOPS & Governance-ல் மேலும் CI/CD டூல்ஸ் (Git),டேட்டா வேலிடேஷன், செக்யூரிட்டி, கவர்னன்ஸ் பிரின்சிபிள் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன், ஆங்கிலத்தில் சரளமாக பேசும், எழுதும் திறன் இருக்க வேண்டும். மேலும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

அனுபவம் என்ன?

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 முதல் 8 ஆண்டு அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். . தற்போதைய அறிவிப்பில் சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்ற முகவரிக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்க வேண்டும். தற்போது இண்டர்வியூவுக்கான தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து மேற்கூறிய முகவரிக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு இண்டர்வியூ தேதி, விவரங்கள் பற்றி தெரிவிக்கப்படும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, புனே, இந்தூர், ஹைதராபாத் மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னையில் கூட வேலை கிடைக்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+