IT JOBS: சென்னையிலேயே ஐடி வேலை ரெடி.. டிசிஎஸ் நிறுவனத்தில் டிசம்பர் 6ம் தேதி இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் கஸ்டமர் சர்வீஸ் ஸ்பெஷலிஸ்ட் பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ டிசம்பர் 6ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. தகதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட 2 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் டிசிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் தான் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் கஸ்டமர் சர்வீஸ் ஸ்பெஷலிஸ்ட் (Customer Service Specialist) பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்பயப்ட உள்ளனர். அதன்படி தேர்வாகும் நபர்கள் டெக்னிக்கல் சப்போர் Representative - வாய்ஸ் பொறுப்பில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியை விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி விண்ணப்பதாரர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ‛சாட்' செய்ய தெரிந்திருக்க வேண்டும். நைட்ஷிப்ட் மற்றும் விக்எண்ட் பணி என்றாலும் அதனை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
மேலும் கோர் டெக் சப்போர்ட் புராஜெக்ட்டில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் இன்ஃப்ரா, ஸ்ட்ரோஜ், சர்வீஸ் டெஸ்க் உள்ளிட்டவற்றில் 6 மாதங்களுக்கு மேலாக அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் புராடெக்ட் ட்ரபிள்சூட்டிங், ரிசால்விங் பிரச்சனை/டிக்கெட்ஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதோடு ஏதாவது ஒரு டிக்கெட்டிங் டூல்ஸ் பற்றியும், ஐடிஐஎல் பற்றியும் தெரிந்திருக்க வேண்டம்.
மேலும், ஏடபிள்யூஎஸ், அசூர், கூகுள் கிளவுட் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் கூகுள், மைக்ரோசாப்ட் புராடெக்ட்டில் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 1 முதல் 6 ஆண்டு வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அல்லது இந்தூர் ஆகிய இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான இண்டர்வியூ டிசம்பர் 6ம் தேதி (நாளை மறுநாள், சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றயை தினம் Tata Consultacy Services Ltd, 415/21-24, Kumaran Nagar, Sholinganallur, Old Mahabalipuram, Chennai - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications